Saturday, August 31, 2013



"உணவு உடம்பை மட்டுமல்ல; மனசையும் பாதிக்கும்
மகாபெரியவா சொன்ன கதை"

உணவு உடம்பை மட்டுமல்ல; மனசையும் பாதிக்கும் என, இன்றைய மருத்துவ ஆராய்ச்சிகள் மெய்ப்பிக்கின்றன. இப்படியான ஓர் உணவுச் சிக்கலில் சந்நியாசி ஒருவர் மாட்டிக்கொண்டு பரிதவித்த சம்பவத்தை இங்கே அழகான ஒரு கதையாகச் சொல்லி, இந்த உண்மையை நமக்கு எளிதாகப் புரியவைக்கிறார் மகா பெரியவா.

எங்கே... அவரின் வாய் வார்த்தையாலேயே அந்தக் கதையைக் கேட்போமா?
'ராஜா ஒருத்தன் இருந்தான். அவனுக்கு ஒரு குரு. அவர் அடிக்கடி அரண்மனைக்குப் போய் உபதேசம் பண்ணிவிட்டு வருவார். அப்படி ஒருநாள் காலம்பற போனவர், நீண்டநேரம் அநேக விஷயங்களை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்ததால் மத்தியானம் வந்துவிட்டது. ''இங்கேயே பி¬க்ஷ பண்ணிவிட்டுப் போகணும். ஆசார நியமத்தோடு, தனியாகப் பண்ணிப் போட ஏற்பாடு செய்கிறேன்'' என்று ராஜா ரொம்பவும் கேட்டுக்கொண்டான்.

அவனுடைய பிரார்த்தனையை மறுக்க முடியாமல் அவர் அரண்மனையிலேயே போஜனம் செய்தார். அப்போது நல்ல வெயில் வேளை! பஞ்சபக்ஷ்ய போஜனம் பண்ணினதில் அவருக்குக் களைப்பாக இருந்ததால், அங்கேயே கொஞ்ச நேரம் இளைப்பாறினார்.

அவர் சிரம பரிகாரம் பண்ணிக்கொண்ட அறையின் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு முத்துமாலை அவர் கண்ணில் பட்டது. அது ராஜாவுடையது. நல்ல வைராகியான அவருக்கு எதனாலோ அன்றைக்கு அந்த முத்தாரத்தைப் பார்த்தவுடன், அதை எடுத்து வைத்துக்கொண்டு விடவேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. பக்கத்தில் யாருமில்லாததால் சட்டென்று அதை எடுத்து, வஸ்திரத்துக்குள் ஒளித்து வைத்துக்கொண்டுவிட்டார். சாதாரண மனிதர்கள் பண்ணினாலே திருட்டு என்பது பாவம்; குற்றம். மகானாக, ராஜகுருவாக இருந்தவர் கொஞ்சங்கூட மனசை உறுத்தாமல் இப்படிப் பண்ணிவிட்டு, தாம்பாட்டுக்கு ஆஸ்ரமத்துக்குத் திரும்பிப் போய்விட்டார்.

அன்று ராத்திரி முழுக்க அவருக்கு சரியாகத் தூக்கமே இல்லை. மறுநாள் முழித்துக் கொள்கிறபோதே வயிற்றில் 'கடமுடா’ பண்ண ஆரம்பித்தது. பேதி பிடித்துக்கொண்டது. அஞ்சு தடவை, ஆறு தடவை 'போய்’ ரொம்ப பலஹீனமாய்விட்டது.

ஆனாலும், இப்படி உடம்பு ஆயாஸப்பட்டுப் போனாலும், பேதியானதிலிருந்தே அவருடைய மனஸுக்கு ஒரு தெளிவு ஏற்படத் தொடங்கியிருந்தது. முதல்நாள் உண்டான கெட்ட எண்ணமும், ஆசைகளும் கொஞ்சங் கொஞ்சமாக விலகிக்கொண்டே வந்தன. இப்போது இனிமேலே 'போவதற்கு’ எதுவுமே இல்லை என்கிற மாதிரி உடம்பு கிழித்த நாராக ஓய்ந்துபோன ஸ்திதியில், அவருடைய வழக்கமான உசந்த மனசே அவருக்குத் திரும்பிவிட்டது.

உடம்பு ஓய்ந்துபோன நிலையிலேயே முத்துமாலையை எடுத்துக்கொண்டு அரண்மனைக்கு ஓடினார். ராஜாகிட்டே போய், அந்த ஹாரத்தைக் கொடுத்து, ''என்ன காரணமென்றே தெரியவில்லை. நேற்றைக்கு மத்தியானத்திலிருந்து என் புத்தி கெட்டுப்போய்க் கிடந்தது. அந்தக் கெட்ட ஆவேசத்தில் நான்தான் இந்த மஹாபாவத்தைப் பண்ணினது. திருடனை எப்படித் தண்டிக்க வேண்டுமோ அப்படி எனக்கு சி¬க்ஷ பண்ணு!' என்று ராஜாவிடம் சொன்னார்.ராஜா யோசித்தான். அப்புறம் சொன்னான்... ''நீங்களே சொல்வதால் நீங்கள்தான் ஹாரத்தை எடுத்ததாக வைத்துக்கொள்ளப் பார்க்கிறேன். ஆனாலும், எந்தக் காரணத்துக்காக அது பண்ணப்பட்டது என்பதையும் ஆராய்ந்து, அதை ஒட்டியே ஒரே குற்றத்துக்கு வேறு வேறு சி¬க்ஷகளை நீதி சாஸ்திரம் சொல்லியிருக்கிறது. எப்படியாகப்பட்டவர், என்ன மாதிரியான சந்தர்ப்பத்தில், எந்தவிதமான நோக்கத்துக்காகக் குற்றம் செய்தார் என்று கவனித்தே தீர்ப்புச் செய்ய வேண்டும். (ஸர்க்கம் ஸ்டன்ஸ், மோட்டிவ் பார்த்தே சென்டென்ஸ் பண்ணவேண்டும் என்றுதானே இப்போதும் லா இருக்கிறது?) அதனாலே, மகானான தாங்கள் இப்படியரு கார்யம் பண்ணினீர்களென்றால், எந்தக் காரணத்தின் மேலே அப்படிப் பண்ணினீர்கள் என்று தெரிந்துகொள்ளாமல் தண்டிக்கிறதற்கில்லை' என்றான்.

அதற்கு அந்த குருவானவர், ''நேற்று நீ பிரியத்தின் பேரில் நிர்பந்தம் செய்ததால் நான் இங்கே சாப்பிட்டேன். அதற்கப்புறந்தான் இந்தப் பாப கார்யத்தில் என் புத்தி பிரவேசித்திருக்கிறது. நேற்றுச் சாப்பிட்ட அன்னம் வயிற்றில் இருந்தவரையில் மனசு கெட்டுப் போயிருந்தது. இன்றைக்கு தெய்வ ஸங்கல்பத்தால் அதிஸாரம் உண்டாகி, அது வெளியே போகப் போகக் கெட்ட எண்ணமும் வெளியேறியிருக்கிறது என்று தோன்றுகிறது. இதிலிருந்து, சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறபடி ஆன தோஷத்தால்தான் குணதோஷம் ஏற்பட்டிருக்கிறது என்று அநுமானிக்கத் தோன்றுகிறது. அநுமானத்தை ஊர்ஜிதம் பண்ணிக் கொள்வதற்கு நீ வேண்டுமானால் நேற்று அன்னமாகப் பக்குவம் பண்ணின அரிசி முதலானதுகள் எங்கேயிருந்து வந்தன என்று விசாரணை பண்ணிப் பார்'' என்றார்.

அன்னம் என்பதில் ப்ரோட்டின், கார்போஹைட்ரேட், வைட்டமின் முதலியன மட்டும் இல்லை. அதைச் சமைத்தவர், தான்யமாகவும், பச்சைக் காய்கறியாகவும் அதை விலைக்கோ தானமாகவோ கொடுத்தவர், அதைப் பயிர் பண்ணியவர் ஆகியவர்களுடைய குணதோஷங்களும் அந்த அன்னத்தில் சூட்சுமமாக டெபாஸிட் ஆகி, சாப்பிடுகிறவனுக்குள் போகிறது. இவர்கள் தோஷமுடையவர்களாயிருந்தால் சாப்பிடுகிறவனையும் அந்தத் தோஷம் தொற்றிக்கொள்ளும். இதுதான் அன்னதோஷம் என்பது.ராஜா உடனே உக்ராண மணியக்காரனுக்குத் தாக்கீது அனுப்பினான். முதல்நாள் குருவுக்குச் சமைத்துப் போட்ட அரிசி எங்கேயிருந்து வந்தது என்று விசாரித்துத் தெரிவிக்கும்படி உத்தரவு போட்டான்.மணியக்காரன் பூரா விவரங்களையும் விசாரணை பண்ணித் தெரிவித்தான். என்ன தெரிவித்தானென்றால்... சிலநாள் முந்தி ஒரு பெரிய கொள்ளைக்காரன், கடைத் தெருவில் ஒரு பெரிய மளிகைக் கடையிலிருந்து ரொம்ப உசந்ததான ஸன்ன சம்பா மூட்டைகளைத் திருடி, அப்புறம் ராஜ சேவகர்களிடம் பிடிபட்டான். அவனோடு அரிசி மூட்டையும் கைப்பற்றப்பட்டது. அப்புறம், அவனுக்குச் சி¬க்ஷயும் விதிக்கப்பட்டது. ஆனாலும், உடைமைக்கு (அரிசிக்கு) சொந்தக்காரன் அதை ராஜாங்கத்திலிருந்து திரும்பி வாங்கிக் கொள்வதற்கான 'ட்யூ டேட்’ ஆகியும் எதனாலோ ஆஜராகவில்லை. அதனால், சட்டப்படி அந்த அரிசி அரண்மனைப் பண்டகசாலையில் சேர்க்கப்பட்டுவிட்டது. நேற்றுவரை பிரயோஜனப்படுத்தாத அந்த அரிசியைத்தான் முதன்முதலில் குருவுக்குச் சமைத்துப் போட்டார்களாம்.

திருட்டுச் சொத்தை ராஜ தர்மப்படி ராஜா ஸ்வீகரித்தாலும், அது மகானுடைய சாத்விக சந்நியாச தர்மத்துக்கு விரோதமானதால், அவரை 'அஃபெக்ட்’ பண்ணிவிட்டது. ஆனாலும், அவர் மனசறிந்து குற்றம் பண்ணாததாலும், அவருடைய பூர்வ சரித்திரம் சுத்தமானதாலும், பகவானே அப்புறம் அவருக்கு அதிஸாரம் உண்டாகுமாறு பண்ணி, அவருடைய உடம்பில் அந்த அன்ன ஸத்து ரத்தமாய்ச் சேராமல் வெளியேறும்படி செய்து, தோஷத்தைப் போக்கிவிட்டான்.இதிலே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சாப்பாட்டோடு சம்பந்தப்பட்டவர்களின் குணதோஷங்கள் சாப்பிடுகிறவனை பாதிக்கின்றன என்பதே!சுத்தமான ஆகாரம் என்பது இரண்டு விஷயங்களைப் பொறுத்தது. ஒன்று, ஆகாரமாக ஆகிற வஸ்துக்கள்- தானியம், காய்கறி முதலான பதார்த்தங்கள் சுத்தமானவையாக இருக்க வேண்டுமென்பது; அதாவது... வெங்காயம், முள்ளங்கி மாதிரி மனசைக் கெடுக்கிறவையாக அவை இருக்கப்படாது. இரண்டாவது, அந்த ஆகாரம் நம் இலையில் வந்து விழுகிற வரையில், அதில் சம்பந்தப்பட்டவர்கள் சுத்தமாயிருக்க வேண்டும்!'
நத்தத்தில் காஞ்சி பரமாசார்யாள் ஒரு சமயம் இருந்தபோது நடந்த சம்பவம். பெரியவாள் தங்கியிருந்த இடத்தில் ஒரு வேதபாராயண கோஷ்டி வேதத்தில் ஒரு அனுவாகம் கூறிக்கொண்டிருந்தார்கள்.அந்த இடத்திற்கு ஒர் ச்ரத்தையில்லாத பிராம்மணன் வந்திருந்தான். அவனுக்கு வேதம் தெரியாது. ’என்னவோ அர்த்தமில்லாமல் முணமுணக்கிறதே இந்த கோஷ்டி. இதனால் உலகத்திற்கு என்ன ப்ரயோஜனம்? ஏழை எளியவர்களுக்கு ஏதாவது திட்டமிட்டு செலவழித்தாலும் புண்யமாவது கிடைக்குமே’ என்று கூறினானாம். இது எப்படியோ பெரியவாள் காதுகளையும் எட்டிவிட்டது.

நமக்கும் பெரியவாளுக்கும் அதுதான் வித்யாசம். வால்மீகி மகரிஷி தனது ராமாயணத்தில் ராமரைப்பற்றிக் கூறும்போது, "நூறு குற்றங்கள் செய்தாலும் கொஞ்சம் கூட ஞாபகம் கொள்ள மாட்டார். ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்தாலும் அதைக்கொண்டே பூரண திருப்தி அடைந்து விடுவார்" என்று வர்ணித்திருப்பதை நடந்து காட்டியவர் நமது காஞ்சி பரமாச்சார்யாள்

அன்று மாலை பூஜாகாலத்திற்குப் பிறகு பெரியவாள் அருள்வாக்கு கூற அமர்ந்தார். காலையில் கம்ப்ளெய்ன்ட் செய்த ஆசாமியும் அங்கு, மாலை, கூட்டத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார். அவனருகில் சென்று மடத்து சமையல்காரனைக் கூப்பிட்டார். ’இந்த ப்ராம்மணனுக்குப் பகல் சாப்பாடு நன்றாக இல்லையாம். ராத்திரி கொஞ்சம் ஸ்பெஷலாக கவனித்துக்கொள்" என்று கூறினார். அந்த சமையல்காரன் இந்த ப்ராம்மணனைப் பார்த்து முணமுணத்துக் கொண்டே போனான். இந்த பிராம்மணனுக்கு படுகோபம் வந்து விட்டது. "ஸ்வாமி! பார்த்தேளா! என்னமோ முணமுணத்துக் கொண்டே போகிறானே பார்த்தேளா?" என்றான் அந்த பிராம்மணன்.

நம் நடமாடும் தெய்வம் புன்முறுவலுடன் கேட்கிறார். "அவன் என்ன முணமுணத்தான் என்று தெரியுமா?" என்று. "அது காதில் விழவில்லை. ஆனால் முணமுணத்ததுகாதில் நன்றாக விழுந்தது" என்றான் பிராம்மணன். "அவன் என்ன சொன்னான் என்று புரியாத முணமுணப்புக்கு, அது என்ன வார்த்தை, யாரைப்பற்றி என்று தெரியாமல் இருக்கும்போது, அந்த முணமுணப்பு சப்தம் உன்னிடம் ஒரு ரியாக்ஷன் ஏற்படுத்துமானால், வழிவழியாக பரம்பரையாக வந்த வேத முணமுணப்பு, அந்த அட்மாஸ்ஃபியரில் எத்தகய உயர்ந்த ரியாக்ஷன் ஏற்படுத்தும் என்பது உனக்குக் காலையில் ஞாபகமில்லை போலிருக்கு" என்று சொன்னார்.

சப்தத்திற்கு, வேத சப்தத்திற்கு உள்ள மதிப்பை, ஆசார்யாள் சொல்லுகிறமாதிரி யார் நமக்கு மனதில் பதியும்படி சொல்லமுடியப்போகிறது!

அந்த ப்ராம்மணன் வேத அத்யயனகோஷ்டியை இகழ்ந்தற்கு ஆசார்யாள் அஸூயைப்படவில்லை. ஸ்ரீ மடத்தில் தனது சன்னிதானம் இருக்கும் இடத்தில், காலையில் காலை வைத்துவிட்ட அந்த ஒரு புண்ணியத்திற்காக (कृतेनैकेन तुष्यति) அவன் வேத கோஷ்டியை இகழ்ந்த பாபத்தை மறந்துவிட்டு, ஒரு சிறிதும் கோபமோ, வெறுப்போ கொள்ளாமல், அவனுக்கும், அவனை வ்யாஜமாக, லோகத்தினருக்கும் ஞானம் அனுக்ரஹம் பண்ணுவது இருக்கிறதே, அதுதான் "தெய்வீகம்" என்பதற்கு லக்ஷணம்.

அந்த பரமாசார்யாளின் பாததூளி பாக்யம் எத்துணை உயர்ந்ததாக இருக்கும் என்று கூறவும் வேண்டுமோ?
சங்கரரை நேரில்கண்ட ஸ்தபதி
கணபதி ஸ்தபதியின் தரிசன அனுபவம்

காஞ்சிப் பெரியவரை 19 63-இல் முதன்முதலில் தரிசித்தேன்.
என்வாழ்வின் வழிகாட்டி உலகம் அறிந்த இரண்டு மகரிஷிகள்.
ஒருவர் காஞ்சி மஹரிஷி, மற்றவர் ரமண மஹரிஷி.

என்தந்தை 19 57-முதல்* சிற்பக் கல்லூரி முதல்வர்.
19 60-இல் அவருக்கு திடீரென வாதநோய் கண்டது.
உடல்செயல் இழந்துவாய் பேசமுடியாமல் ஆங்கில மருத்துவத்தில் குணமில்லை.
என்னை வளர்த்ததிரு கம்பனடிப்பொடி கணேசன்சொன்ன ஆயுர்வேதமும் பயன்தரவில்லை.
இப்படியொரு சமயத்தில் காஞ்சிப் பெரியவரைப் பார்க்கச் சென்றேன்.

அப்போது சுவாமிகள் இளையாற்றங் குடியில் முகாமிட் டிருந்தார்.
அந்தக் குக்கிராம் நான்சென்ற போது இரவுமணி ஒன்பதுக்குமேல்.
ஸ்தபதி உடல்நலிவு கேட்டு சுவாமிகள் உடனே வெளிவந்தார்,
தன்னைச் சூழ்ந்திருந்த செட்டிநாடு பக்தர் புரவலர்களிடம் இருந்து.
சிற்பக்கலை சொல்லிக் கொடுத்துக் கோவில்பல கட்டினார் தந்தை,
ஏனிந்த நிலைசுவாமி அவருக்கு என்றெல்லாம் அவரிடம் கேட்டேன்.

சுவாமிகளோ பதிலேதும் கூறாமல் என்னைப் பற்றி என்கல்வி
வேலை பற்றியே விசாரித்தது எனக்குக் கவலை யளித்தது.
தந்தைக்கு என்னாகுமோ உயிர்பிழைக்க மாட்டாரோ என்று அஞ்சினேன்.
திடீரென்று ’வா,என்னுடன்’ என்று சுவாமிகள் எழுந்து நடந்தார்.

வெகுதூரம் நடந்தவர் மூத்த சுவாமிகள் அதிஷ்டானம் வந்துநின்றார்.
’இங்கேயே இரு’வென்று கூறிவிட்டு உள்ளே சென்று மறைந்தார்.
இரவுமணி நடுநிசியைத் தாண்டிவிட வெகுநேரம் காத்திருந்தபின் வந்தார்.
’எங்கே அந்தப் பையன்?’ என்று கேட்டபடி வெளிவந்தார்.

தண்டத்துடன் மட்டுமே சென்றவர் கையிலிரு தேங்காய் மூடிகள்.
வியப்புடன் நான்பார்க்கப் பிரகாரத்தின் மூலைசென்று தண்டத்துடன் நின்றார்.
தந்தை நிலைபற்றி விசாரித்துநான் சொன்னதெல்லாம் கவனமாகக் கேட்டார்.
’தந்தைக்கு வந்திருப்பது ப்ராரப்த கர்மாவால். நீஅமோக மாயிருப்பாய்’
என்றுகூறித் தேங்காய்கள் தந்து, மேலாளரைப் பார்த்துச்செல் என்றார்.

தந்தைபற்றி ஒன்றும் சொல்லாமால் என்னைமட்டும் திரும்பத் திரும்ப
’நீஅமோக மாயிருப்பாய்’ என்று சொன்னது எனக்குப் புரிந்தது.
தந்தைசில மாதங்கள் கழிந்த பின்னர் இறைவனடி சேர்ந்தார்.

நான்மட்டும் தனியாக இருளில் திரும்ப, வழிதெரியாமல் திகைத்தேன்.
திடீரென்று குடுமிவைத்த எட்டுவயதுச் சிறுவன் ஒருவன் தோன்றினான்.
’ஸ்தபதி என்பின்னே வாரும்’ என்றுசொல்லிக் கூட்டிச் சென்றான்.
’யாரிவன், பேய்பிசாசோ, அருகில் மயானம்’--பயந்தபடி பின்தொடர்ந்தேன்.

கோபுலுவின் ஆதிசங்கரர் ஓவியம்போல இருந்தது அவனுருவம்.
ஓவியப் பையனே நேரில் வந்தது போலிருக்க வியந்தேன்.
மேலாளர் அறையருகில் விட்டுவிட்டு ஏதோசொல்லி இருளில் மறைந்தான்.
வந்து வழிகாட்டிச் சென்றது சங்கரர்தான் என்றது உள்ளுணர்வு.



மேலாளர் தந்த பணத்தை வாங்கமனம் ஒப்பவில்லை எனக்கு.
’சுவாமிகள் உத்தரவு’ என்று சொல்ல வாங்கிக் கொண்டேன்.
பசியெடுக்க அங்கேயே இரவு ஒருமணிக்கு சுடச்சுட உணவிட்டனர்.

19 65-இல் நடந்த வேதாகம சில்பவித்வத் சபாவில்
புகழ்பெற்ற அனுபவமிக்க ஸ்தபதிகள் பலபேர் இருந்த அவையில்
இளைஞனான என்னைப் பேசச் சொல்லி இளம்சிற்பக் கலஞர்களை
வளர்த்துவிட்ட காஞ்சிமஹா பெரியவருக்கு கோடிகோடி வணக்கங்கள்.

Friday, August 30, 2013

ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த கிருஷ்ண பக்க்ஷம் பித்ருக்களுக்கு இரவாகிறது. அஷ்டமி பக்க்ஷத்தின் நடுவில் வருவதால் அன்று பித்ருக்களுக்கு நடுநிசியாகும். ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்தது அஷ்டமியன்று நடுநிசி. இதனால் என்ன ஏற்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள் எல்லோருக்கும் GC. எல்லா தினுசிலும் இருட்டு அதிகமாக இருக்கும் சமயம். ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்ததும் இருள் நிறைந்த சிறைச்சாலை. இப்படி ஸ்ரீ கிருஷ்ணாவதார காலத்தில் எல்லாம் இருள் மயமான சூழ்நிலை. 
அவனுடைய பெயரும் கிருஷ்ணன். 'கிருஷ்ண' என்றால் கருப்பு என்று பொருள். அவனது மேனியும் கறுப்பு. இப்படி ஒரே கறுப்பான சமயத்தில் தானும் கறுப்பாக ஆவிர்ப்பவித்தாலும் அவனே ஞான ஒளி. நல்ல காளமேகங்களாகளிடையே மின்னல் மாதிரி இத்தனை இருட்டுக்கு நடுவே தோன்றிய ஞான ஒளி.
உலக விளையாட்டு

உறியடி உத்ஸவத்தில் வழுக்கு மரத்தில் பலர் ஏறி ஏறிச் சறுக்கி விழுவார்கள். கடைசியில் ஒரே ஒருவன் ஏறி விடுகிறான். அவன் ஒருவன் ஏறுவதற்காகத்தான் அத்தனை பேரையும் அத்தனை பிரயாசைப்படுத்தி விளையாட்டு நடக்கிறது.

உலக விளையாட்டும் அப்படியே! நம்மில் பலர் சறுக்கி விழுந்தாலும் ஒருவன் பூரணத்துவத்தைப் பிடித்துவிட்டால் போதும், எத்தனை முறை சறுக்கினாலும் உறியடியில் திரும்பத் திரும்ப முயற்சி செய்பவனைப் போல், நாமும் பூரணத்துவத்தை அடைய முயன்று கொண்டிருப்போம்.

அம்பாள் நம்மில் யாருக்குக் கை கொடுத்து ஏற்ற வேண்டுமோ, அவனை ஏற்றி வைப்பாள். அவன் ஒருத்தன் அதற்குப் பிற்பாடு இந்த ஏமாற்று வித்தையிலிருந்து தப்புவதே நம் இத்தனை பேருக்கும் போதும்.

- காஞ்சி மகா பெரியவர்
சதா ஏன் காயத்ரி பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறேன்? காயத்ரி மந்திரத்தில் அப்படி என்ன இருக்கிறது?- காஞ்சி மஹா பெரியவர்
(ஆகஸ்ட்-21 காயத்ரீ ஜபம்)21-08-2013.)

Saasthra பிரகாரம் செய்ய வேண்டிய கார்யங்களுக்குள் எல்லாம் முக்கியமான காரியம் காயத்ரீ ஜபம்.

த்ரிபம் ஏவது வேதேப்ய:பாதம் பாதமதூதுஹம் (மநுஸ்மிருதி)
காயத்ரீ மூன்று வேதத்திலிருந்து ஒவ்வொரு பாதமாக எடுத்தது என்று மநுவே சொல்கிறார். வேதத்தின் மற்றதையெல்லாம் விட்டுவிட்ட நாம் இதையும் விட்டால் கதி ஏது?

ரிக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்று வேதங்களையும் இறுக்கிப் பிழிந்து கொடுத்த essence (ஸாரம்) காயத்ரீ மஹாமந்திரம்.

காயத்ரீ என்றால், "எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது"என்பது அர்த்தம்.

காயந்தம் த்ராயதே யஸ்மாத் காயத்ரீ (இ) த்யபிதீயதே !

கானம் பண்ணவதென்றன்றால் இங்கே பாடுவதில்லை; பிரேமயுடனும் பக்தியிடனும் உச்சரிப்பது என்று அர்த்தம். யார் தன்னை பயபக்தியுடனும் பிரேமையுடனும் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரீ மந்திரம் ரக்ஷிக்கும். அதனால் அந்தப்பெயர் அதற்கு வந்தது. வேதத்தில் காயத்ரீயைப் பற்றிச் சொல்லும் பொழுது,

காயத்ரீம் சந்தஸாம் மாதா

என்று இருக்கிறது. சந்தஸ் என்பது வேதம். வேத மந்திரங்களுக்கெல்லாம் தாயார் ஸ்தானம் காயத்ரீ என்று இங்கே வேதமே சொல்கிறது. 24 அக்ஷரம் கொண்ட காயத்ரீ மந்திரத்தில் ஒவ்வொன்றும் எட்டெழுத்துக் கொண்ட மூன்று பாதங்கள் இருக்கின்றன. அதனால் அதற்கு 'த்ரிபதா' காயத்ரீ என்றே ஒரு பெயர் இருக்கிறது.

காயத்ரீயில் ஸகல வேத மந்திர சக்தியும் அடங்கியிருக்கிறது. மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியைக் கொடுப்பது அதுதான். அதை ஜபிக்காவிட்டால் வேறு மந்திர ஜபத்திற்குச் சக்தி இல்லை. காயத்ரீயை ஸரியாகப் பண்ணினால்தான் மற்ற வேத மந்திரங்களிலும் ஸித்தி உண்டாகும்.

மந்திரசக்தி குறையாமல் இருக்க தேஹத்தை சுத்தியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தேஹோ தேவாலய:ப்ரக்தோ ஜீவ:ப்ரோக்தோ ஸநாதன:|

தேஹம் ஒரு தேவாலயம். அந்த ஆலயத்துக்குள் இருக்கிற உயிரான ஜீவன் ஈச்வரஸ்வரூபம். ஆலயத்தில் அசுத்தியோடு போகக்கூடாது. அங்கே அசுத்தமான பதார்த்தங்களை சேர்க்கக் கூடாது. மாம்ஸம், சுருட்டு முதலியவைகளை கொண்டு போனால் அசுத்தம் உண்டாகும். ஆகம சாஸ்திரங்களில் தீட்டோடும் தேஹ அசுத்தத்தோடும் ஆலயத்துக்குப் போகக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அப்படியே மனித தேஹம் ஒரு தேவாலயமானால் அதிலும் அசுத்தமான பதார்த்தங்களைச் சேர்க்கக்கூடாது. குறிப்பாக, மந்திரசக்தி இருக்க வேண்டிய தேஹத்தில் அசுத்தமானவைகளைச் சேர்த்தால் அது கெட்டுப் போய்விடும். வீட்டுக்கும் தேவாலயத்திற்கும் வித்தியாஸம்இருக்கிறது. ஆனாலும் தேவாலயத்தைப் போல அவ்வளவு கடுமையாக அசுத்தம் வராமல் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு மூலையிலாவது வாய் கொப்புளிக்கவும்,ஜல மல விஸர்ஜனத்துக்கும், பஹிஷ்டா (மாதவிடாய்) ஸ்திரீக்கும் இடம் வைக்கிறோம். Flat system -ல் கடைசியில் சொன்னது போய், அநாசார மயமாகி விட்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஆலயத்தில் கொஞ்சங்கூட இடமில்லையல்லவா?

ஒரு தேசத்தில் வீடும் வேண்டும், ஆலயமும் வேண்டும். அதே மாதிரி ஜனசமூகத்தில் லோக காரியங்களைச் செய்யும் வீடு மாதிரியான தேகங்கள், ஆத்ம காரியத்தைச் செய்யும் ஆலயம் மாதிரியான தேகங்கள் இரண்டும் வேண்டும். தேஹங்களுக்கு ஆத்மாவை ரக்ஷிப்பவை தேவாலயத்தைப் போல பாதுகாக்கப்பட வேண்டிய பிராம்மண தேஹங்கள். வேத மந்திர சக்தியை ரக்ஷிக்க வேண்டியவைகளாதலால் ஆலயம்போல் அதிக பரிசுத்தமாக அந்த தேகங்கள் இருக்க வேண்டும். அசுத்தியான பதார்த்தங்களை உள்ளே சேர்க்கக் கூடாது.

மந்திர சக்தியை ரக்ஷித்து அதனால் லோகத்துக்கு நன்மையை உண்டாக்க வேண்டுவது பிராம்மணன் கடமை. அதனால்தான் அவனுக்கு அதிகமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. "மற்றவர்கள் அது பண்ணுகிறார்களே, நாமும் ஏன் பண்ணக்கூடாது?"என்று அசுத்தியைத் தரும் காரியங்களை பிராம்மணன் பண்ணக்கூடாது. அவர்களெல்லாம் சரீரத்தை வைத்துக் கொண்டு ஸந்தோஷமான அநுபவங்களை அடைகிறார்களே என்று இவன் தனக்குத் தகாதவற்றைச் செய்யக்கூடாது. "பிராம்மணனுக்கு தேஹம் ஸந்தோஷத்தை அநுபவிப்பதற்காக ஏற்பட்டதல்ல.

லோக உபகாரமாக வேதத்தை ரக்ஷிக்க வேண்டிய தேஹம் அது. அது மஹா கஷ்டப்படவே ஏற்பட்டது"என்று (வாஸிஷ்ட ஸ்ம்ருதி'யில்) சொல்லியிருக்கிறது:"ப்ராஹ்மணஸ்ய சரீரம் து நோபபோகாய கல்பதே!இஹ க்லேசாய மஹதே". லோக க்ஷேமத்திற்காக மந்த்ரங்களை அப்யஸிக்க வேண்டும் என்பதற்காகவேதான் செலவு பண்ணி உபநயனம் முதலியவைகளைச் செலவு பண்ணி உபநயனம் முதலியவைகளைச் செய்து கொள்வது. வேத மந்திரங்களை ரக்ஷிப்பதற்காகவே-

அதன் மூலம் ஸகல ஜீவ ஜந்துக்களையும் ரக்ஷிப்பதற்காகவே - தேஹத்தை வைத்துக் கொள்ள வேண்டும். 'எல்லோரும் ஸெளகரியமான தொழில் பண்ணுகிறார்களே!ஏன் நாம் செய்யக் கூடாது?என்று பிராம்மணன் நினைக்கக் கூடாது. தன்னுடைய கடமையை நன்றாகச் செய்துவிட்டுப் பிறகுதான் ஜீவனோபாயத்தை நினைக்க வேண்டும். முன்பு இவன் பிராம்மண தர்மங்களைச் செய்தாலே போதுமென்று ராஜாவும் ஸமூஹமும் இவனுக்கு மானியம், ஸம்பாவனை செய்து வாழ வசதி தந்தார்கள்.

இப்போது நிலைமை மாறிவிட்டதால், பணத்துக்கும் கொஞ்சம் பிரயத்தனப்பட வேண்டியதுதான். ஆனால் நிரம்பப் பணத்தை ஸம்பாதிக்க வேண்டுமென்று ஆசைப்படக்கூடாது. இதற்காக அநாசார வழிகளில் பிரவேசிக்கக் கூடாது. பிராம்மணர்களுக்கு தரித்திர நிலை வேண்டியதுதான். இன்பங்களைத் தேடாமல் காயக் காயக் கிடந்தால்தான் இவனுக்கு ஞானப் பிரகாசம் உண்டாகும். அதனால் லோகம் வாழும். கண்ட தேசங்களுக்குச் சென்று ஆசார அநுஷ்டானங்களை விட்டுவிட்டு ஸம்பாதிக்கிற ஐச்வர்யம் இவனுக்கு வேண்டாம். அதுபடி ஸம்பாதிக்காவிட்டால் ஒன்றும் முடியாது என்பது இல்லை.

லோகத்தில் மந்திர சக்தியைக் காப்பாற்றிக் கொண்டு தன்னுடைய தர்மத்தை அநுஷ்டிப்பது முதல் கடமை. ஸம்பாதிப்பது secondary (இரண்டாவது) தான். மந்திர சக்தி என்ற அக்கினியை இவன் காப்பாற்றிக் கொண்டு வந்தால் அது எல்லோருக்கும் க்ஷேமத்தை உண்டாக்கும். லோகத்தில் எவருக்குக் கஷ்டம் வந்தாலும் அதை நிவர்த்திக்கும் சக்தி பிராம்மணனுக்கு மந்திர சக்தியின் மூலம் இருக்க வேண்டும். யாராவது கஷ்ட காலத்தில் வந்து பிரார்த்தித்தால், அவன் பண்ணுவதைத்தான் நானும் பண்ணுகிறேன், உனக்கு இருக்கிற சக்திதான் எனக்கும் இருக்கிறது"என்று ஒரு பிராம்மணன் சொன்னால் அவனுடைய ஜன்மா வீண்.

மந்திர சக்தியாகிய அக்கினி இப்பொழுது பெரும்பாலும் அணைந்திருக்கிறது. பிராம்மண தேஹம் விகாரம் ஆகிவிட்டது. அதில் அசுத்தமான பதார்த்தங்கள் சேர்க்கப் படுகின்றன. ஆனால், ஒரு பொறி மட்டும் அணையாமல் இருக்கிறது. அதை விருத்தி பண்ணவேண்டும். அப்படிச் செய்தால் எப்பொழுதாவது பற்றிக்கொள்ளும். அந்த நெருப்புப் பொறிதான் காயத்ரீ. அது பரம்பரையாக வந்திருக்கிறது.

மூன்று தலைமுறையாக காயத்ரீயை விட்டு விட்டவன் பிராம்மணனாக மாட்டான். அப்பேர்ப்பட்டவர்கள் இருக்கிற தெரு அக்ரஹாரம் ஆகாது. . ஆனால் இன்னும் மூன்று தலைமுறை ஆகவில்லையாகையால் இன்னும் ப்ராம்மணர்கள் என்று பெயரளவாது சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

மூன்று தலைமுறை யக்ஞம் இல்லாவிட்டால் அவன் துர்ப்ப்ராம்மணன்; கெட்டுப்போன ப்ராம்மணன். கெட்டாலும் 'ப்ராம்மணன்' என்ற பேராவது இருக்கிறது! மறுபடியும் பிராம்மணனாவதற்குப் பிராயச்சித்தம் சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் காயத்ரீயை மூன்றுதலைமுறையாக விட்டுவிட்டால் பிராம்மணத்வம் அடியோடு போய் விடுகிறது. அவன் மறுபடியும் பிராம்மணனாக மாட்டான்.

ஆகையால் அந்த நெருப்புப் பொறியை ஊதிப் பெரிசு பண்ண வேண்டும். சின்ன நெருப்புப்பொறி எதற்கும் உபயோகப்படாது. ஆனால் உபயோகப்படுமாறு பெரிசாக்கப் படுவதற்கு அதில் ஆதாரம் இருக்கிறது.

ஆகையால் ஞாயிற்றுக்கிழமையாவது பூணூல் உள்ளவர்கள் ஆயிரம் காயத்ரீ பண்ண வேண்டும். கண்ட இடத்தில் கண்ட ஆஹாரத்தை உண்ணலாகாது. இது வரைக்கும் அநாசாரம் செய்ததற்குப் பிராயசித்தம் பண்ணிக் கொள்ள வேண்டும்
 — 

Thursday, August 29, 2013

"ராமாயணம் நம் எல்லாருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் அந்த தெரிந்த கதையையே உங்களுக்குத் தெரியாத மாதிரி சொல்கிறேன். வால்மீகி, கம்பர், துளசிதாசர் எழுதியவை தவிர, ஆனந்த ராமாயணம், அற்புத ராமாயணம், துர் வாச ராமாயணம் என்றெல்லாம் பல ராமாய ணங்கள் இருக்கின்றன. அதில் ஏதோ ஒன்றில் இந்த வித்தியாசமான விஷயம் இருக்கிறது.

அம்பாள்தான் ஸ்ரீராமனாக அவதரித்தாள் என்பது கதை. ஈஸ்வரனே சீதையாக உடன் வந்தார். ஸ்ரீராமன் நல்ல பச்சை நிறம்! "மரகத மணி வர்ணன்' என்பார்கள். அம்பிகையை "மாதா மரகத சியாமா' என்கிறார் காளிதாசர். முத்து சுவாமி தீட்சிதரும் "மரகத் சாயே' என்று மீனாட்சியைப் பாடுகிறார். சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரத்தைத் தாண்டி மூலகாரணமாக இருக் கிறபோது பராசக்தி செக்கச் செவேல் என்று இருந்த போதிலும், மும்மூர்த்திகளில் ஒருவருக்குப் பத்தினியாக பார்வதியாகி இருக்கிறபோது பச்சை நிறமாகத்தான் இருக்கிறாள். இவள்தான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக வந்தாள்.

ஸ்ரீராமன் சீதையை விட்டு காட்டுக்குப் போவது என்று தீர்மானம் பண்ணி விடுகிறார். அப்போது தேவிக்கு உணர்ச்சி பீறிட்டுக் கொண்டு வந்துவிடுகிறது! "காட்டிலே துஷ்டர் பயம், மிருக பயம் இருக்கிறது என்பதற்காக மனைவியை அழைத்துப் போக மறுக்கிறாரே... இவரும் ஓர் ஆண் பிள்ளையா' என்று அவளுக்கு மகா கோபம் வர, அந்த வேகத்தில் ஓர் உண்மையைச் சொல்லி விடுகிறாள். "உம்மை மாப்பிள்ளையாக வரித்த என் பிதா ஜனகர், நீர் ஆண் வேடத்தில் வந்திருக்கிற ஒரு பெண் (ஸ்திரியம் புருஷ விக்ரஹம்) என்பதைத் தெரிந்து கொள்ளாமல் போனாரே' என்று ராமரைப் பார்த்துச் சண்டை போடுகிறாள் சீதாதேவி. இது சாக்ஷாத் வால்மீகி ராமாயண வசனம்.

ஸ்ரீராமனுக்கு அவர் அம்பாள்தான் என்பதை இப்படி சூட்சுமமாக ஞாபகப்படுத்தி விட்டாள் சீதை. உடனே அவருக்கு அவதாரக் காரியம் நினைவுக்கு வந்தது. அதற்கு அனுகூலமாகவே விளையாட்டு நடப்பதற்காக சீதையை அழைத்துக் கொண்டு காட்டுக்குப் போனார்.

ராமரால் சம்ஹரிக்கப்பட வேண்டிய இராவணனோ பெரிய சிவ பக்தன். ஆதியில் அவனுக்கு சிவனையே கைலாசத்திலிருந்து இலங்கைக்குக் கொண்டு வந்து அசோகவனத் தில் வைத்துப் பூஜை செய்ய வேண்டும் என்று ஆசை. அதற்காகத்தான் கைலாசத்தைப் பெயர்த் துப் பார்த்தான். அப்போது அம்பிகை பயந்து ஈசுவரனைக் கட்டிக்கொள்ள, அவர் விரல் நுனியால் மலையை அழுத்தி விட்டார். தப்பினோம் பிழைத்தோம் என்று இராவணன் இலங்கைக்கு ஓடி வந்துவிட்டான். மகா சிவபக்தனாகையால் அவனுக்குத் தன்னுடைய ஈசுவரன்தான் சீதையாக வந்திருக்கிறார் என்று தெரிந்து விட்டதாம். முன்பு அம்பாளால்தான் தன் காரியம் கெட்டுப் போச்சு என்கிற கோபத் தினால், இப்போது அவள் தலையீடு இருக்கக் கூடாது என்றே ராமரை அப்புறப்படுத்திவிட்டு, சீதையைத் தூக்கி வந்து அசோகவனத்தில் வைத்தானாம். ஆனாலும் ராட்சச அறிவானதாலும் அம்மையப்பனான ஜோடியில், ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டதாலும் இராவணனுடைய அன்பு விகாரப் பட்டுக் காமமாயிற்று. இருந்தாலும் சிவபக்தியினால் இவனுக்கு அவதார ரகசியம் அவ்வப்போது கொஞ்சம் தெரிந்தது.

ஆஞ்சனேயரைப் பார்த்தவுடனே இராவ ணன், "இவர் யார்? நந்தியெம் பெருமானா?' என்று நினைக்கிறான். "கிமேஷ பகவான் நந்தி' என்பது வால்மீகி ராமாயண வசனம். சீதாராமர் களின் பரமதாசனாக இருக்கப்பட்ட அனுமா ரைப் பார்த்ததும், கைலாயத்தில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் தாசனாக இருக்கிற நந்திதான் அவர் என்பது புரிந்ததுபோல இராவணன் பேசுகிறான்.

அம்பாளே நாராயணன் என்பதற்காக இந்தக் கதை எல்லாம் சொல்கிறேன். இரண்டும் ஒன்றாக இருக்கட்டும். ஆனால் நாராயணன் என்கிற புருஷ ரூபம், அம்பாளின் ஸ்திரி ரூபம் இரண்டும் நன்றாக இருக்கின்றனவே... இரண் டையும் வைத்துக் கொள்ளலாமே என்று தோன்றுகிறது. அப்போது அவர்களைச் சகோதரர்களாக வைத்துக் கொள்ளலாம். அம்பாளை நாராயணணின் சகோதரி என்று சொல்வதற்கும் புராணக் கதைகள் எல்லாம் பக்கபலமாக இருக்கின்றன.''
Jaya Jaya Shankara, Hara Hara Shankara !


Read more: http://periva.proboards.com/thread/5012/#ixzz2dQ88W1dE
Dhoties to temples,Devotees can leave the place.Periyava entering Kanchi after 6 years.
If any shortcomings in this script pl.mail it to rvjcdl@gmail.com or send message through facebook. Do not comment anything contradictory in the comments column about this matter.Pl.send your contradictory comments in my message column.

Maintain temples in good condition.
Periyava was going through his yatra. He had darsan village temples. Periyava asked Sundaramurthy who was coming along with new dhoties to give dhoties to the temples. Periayava with pain said “ Do you know who in a village wearing a dhoti fully spoiled?” He asked this questions to the kaingariya devotees. They cannot reply immediately because they cannot go and see who is wearing dirty dhoties etc. Periayava said” Only eswaran in temples can be seen with dirty dhoties” . If we our dresses are not clean, we make all out efforts to wash our dresses and wear good dresses. But if we see temples which are not clean,not painted we must take efforts to keep them clean.. We keep our dress clean,so it is our duty to keep temples also in good condition.

Sundaramurthy and Ramayana Srinivasan can leave the yatra.
Periyava took bath in a pumpset on the roadside and was walking through Andhra border. Periyava asked Ramayana Srinivasan to read a sign board on the road which was in Teleugu. Ramayana Srinivasan read as beginning of Andhra border. After Periyava reached the place, Periayava asked Tiruvarur Thatha to prepare meals so that the devotees can take food. After taking food, Periyava gave prasadam and told Sundramurthy and Ramayana Srinivasan to go their respective places. Ramayana Srinivasan was thinking himself that he had to accompany Periyava till the end of Tamil Nadu border. When Periayava reached Andhra border, Periayava told Ramayana Srinivasan to read the board. Ramayana Srinivasan never told Periayava that he had plans to come till Tamil Nadu border but Periyaval knew about the mind of Ramayana Srinivasan. Periyava is anthar yamai, sarva anthar yamai. Periyava is in minds of all devotees.
Periyava entering Kanchipuram after 6 years.
Periyava went to Ranipet and stayed at Thirumalai chemicals where Sampath Iyengar , a devotee made all arrangements for stay of Periyava.Periyava went to other places and stayed at Siruverambur. There is a sivan temple and this temple is famour for architecture. Maragathalingam is also in the temple. Devotees from Chennai had built a mandapam near Siruverambur and worshipping is going on. Some other devotees had also built some mantapams and devotees worship daily where Periyava stayed earlier.
Periyava then went to North Iluppai where Kumarasamy Theekshidar , sastra vidwan,Vijayaraghava ganapadial and others belong to this place. Periyava entered Kanchipuram border after crossing Palar where Kanchipuram dist. collector and devotees of Mudaliar community gave a rousing reception for Periayava.Periyava stayed at the adhisthanam, Kizh Ambi on April 11,1984. Periyava celebrated Tamil new year on April 13, 1984. Periyava performed Pradosham puja, went to mukthi mandampam, Ekambareswar temple etc. At that time, through out all places, bajanai, nagaswaram were going on .
A huge reception was given at Gangaikondan place, where Hanuman temple was there. A huge pandal was erected and three acharyas were given a rousing reception by political leaders and other leaders of our religion. Periyava entered the Sri madam after a gap of 6 yeas. Thus Periayva started his yatra during 1978 and finished his yatra on 1984, Tamil new year day. Periyava entered Kanchipuram and the devotees were happy which was like Ramar entering Ayodhi after completing 14 years in exile.
Like ·  · 


புரந்தர கேசவன்"

காஞ்சி மகாப் பெரியவர் அப்போது ஆந்திர மாநிலத்தில் விஜயம் செய்து கொண்டிருந்தார்; ஒரு நாள் ஒரு சிறிய கிராமத்தை தாண்டி மகாப்பெரியவர் போக வேண்டி இருந்தது ; வழியில் இருந்த அந்த கிராம மக்கள் எப்படி யாச்சும் மகாப்பெரியவரை நம்ம கிராமத்திற்குள் அழைத்து
செல்லன்னும்ன்னு ஆசை அதனாலே மகாப்பெரியவர் செல்லும் வழியில் கிராம மக்கள் வரிசையாக நின்றுக்கொண்டு மகாப்பெரியவர் வந்தவுடன் கீழே விழுந்து வணங்கி மகாபெரியவா எங்க கிராமத்திற்கு ஒரு முறை வந்து செல்லனும் ன்னு வேண்டி கேட்டுக்கொண்டார்கள் ;

பெரியவரும் சிரித்துக்கொண்டே சரி சரி ஒரு நாள் என்ன ஒரு வாரமே தங்கிட்டு போறேனே என்றார் ; கிராம மக்களுக்கு சொல்லொன்னா மகிழ்ச்சி உடடியாக கிராமம் மொத்தமும் சுத்தமா கூட்டி பெருக்கி கோலம் போட்டு மகாப்பெரியவர் ஒரு வாரம் தங்கு வதற்கான ஏற்பாடுகள் செய்து விட்டார்கள் ; மறு நாள் காலை மகாப்பெரியவர் சந்திர மவுலிசர் பூஜை செய்ய வில்வ தளம் வேணுமே இருக்கா கேளுங்கோன்னு சொன்னார் மடத்துகாரர்கள் கிராமத்து தலைவரிடம் கேட்டார்கள் கிராமத்து மக்களுக்கு வில்வதளம் எப்படி இருக்கும்ன்னு தெரியவில்லை ; மடத்திலிருந்து பழைய வில்வதலத்தைக் காட்டி எடுத்து வரச்சொன்னார்கள் ,

சிறுது நேரம் கழித்து வந்தவர்கள் கிராமத்தில் எங்குமே வில்வ மரமே இல்லை என்றார்கள் மடத்தை சேர்ந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை மகாப்பெரியவரிடம் சென்று கையை பிசைந்துக்கொண்டு நின்றார்கள் மகாப்பெரியவர் என்ன வில்வதளம் கிடைக்கவில்லையா? சரி சரி கவலை விடுங்கோ ! அது தானே வரும் என்று சொல்லிவிட்டார் மறு நாள் விடியற் காலை பூஜைக்கு நேரமாச்சு வில்வதளம் இல்லையே என்ன பண்ணறது என்று யோசித்துக் கொண்டு இருந்த போது மடத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் கைகளில் கூடை நிறைய வில்வதளம் கொண்டு வந்தான் ;

எல்லோரும் அவனிடம் கேட்டார்கள் எப்படி வில்வதளம் கிடைத்தது அதற்கு அவன் வாசல் பக்கம் போனேன் , வாசலுக்கு முன்னாடி இது இருந்தது அப்படியே எடுத்துண்டு வந்துட்டேன் என்றான் ; மகாப்பெரியவர் சிரித்துக் கொண்டே என்ன வில்வதளம் வந்துடுத்தா என்றார் மடத்துக்காரர்கள் ஆமா கிடைச்சுடுத்து என்றார்கள் எப்படி கிடைச்சது என்று கேட்டதற்கு நடந்த விவரத்தை சொன்னார்கள் ; அப்படியா ரொம்ப சந்தோசம் நாளைக்கும் கிடைக்குதா பாருங்கோ சொல்லிவிட்டு பூஜை க்கு போய்விட்டார் ; அடுத்த நாள் காலை அதே சிறுவனை அனுப்பி வில்வதளம் கிடைகிறதா பார்த்து எடுத்து வரசொன்னார்கள் சிறுவனும் போனவுடனே அதே மாதிரி கூடை நிறைய வில்வதலத்தை எடுத்து வந்தான் ; மகாப்பெரியவர் கேட்டார் வில்வ இலையை யார் கொண்டு வரா தெரியுமான்னு ? எல்லோரும் திருதிருவென முழித்தார்கள் பதில் எதுவும் சொல்லவில்லை மகாப்பெரியவர் சொன்னார் விடியற் காலையில் ஒளிந்திருந்து பார்த்து வில்வைலையை எடுத்துக் கொண்டு வருபவனை அப்படியே அழைத்து வாருங்கள் என்றார்

மடத்துக் காரர்களும் மறு நாள் காலை பார்த்துக்கொண்டே இருந்தார்கள் ; அப்போது தூரத்தில் ஒரு உருவம் மெல்ல மெல்ல தயங்கியப்படியே வந்து கையில் இருந்த கூடையை வைத்து விட்டு ஒடப்பார்க்கும் போது மடத்துக்காரர்கள் அந்த உருவத்தை பிடித்து கொண்டு அப்படியே மகாப்பெரியவரிடம் முன்னால் நிறுத்தினார்கள் அவ்வுருவம் மிகச்சிறியவ னாய் இருந்தான் அழுக்குத்துண்டுடன் சிறிது நடுங்கியபடி நின்றிருந்தான் ; மக்கப்பெரியவர் அவனை அருகில் அழைத்து உன் பெயர் என்ன என்றுக் கேட்டார் அவனும் மென்று முழுங்கியபடியே புரந்தரகேசவன் என்று சொன்னான் ;
அப்படியா யார் இந்த பெயரை வைத்தார்கள் கேட்டதற்கு அவன் சொன்னான் எங்க அப்பா தான் வைச்சார் அவருக்கு புரந்தரரை ரொம்ப பிடிக்கும் அதனால் எனக்கும் புரந்தர கேசவன் அப்படின்னு பேர் வைச்சார் இப்ப அவர் இல்லை ; நான் காட்டில் மாடு மேய்த்து வருகிறேன் ; அப்பா இருக்கும் போது காட்டில் ஒரு மரத்தை காட்டி இதை நல்லா நினைவில் வைத்துக்கொள் ; ஒரு நாள் நம்ப கிராமத்திற்கு பெரியவர் ஒருவர் வருவார் , அப்போ இந்த மரத்து இலைகள் அவருக்கு தேவைப்படும் , அப்போ நீபோய் இந்த இலைகளை அவரிடம் சேர்த்து விடுன்னு சொன்னார் ; கிராமத்து மக்கள் தேடினது எனக்கு தெரிந்தது ; அதனால கொண்டுவந்து வைத்தேன் என்றான் ;

அப்படியா !அது சரி நீ ஏன் உள்ள வராம வாசலிலேயே வைச்சுட்டு ஓடிப் போயடரே? புரந்தரகேசவன் ; நான் குளிக்காம அழுக்குத்துணி யோட எப்படி வரது ?அதனாலதான் உடனே மகாப்பெரியவர் அவனை குளித்து புது வேட்டியை கொடுத்து கட்டிக்கொள்ள சொன்னார் ; பிறகு இனிமே நீ வில்வ தளத்தை எடுத்துண்டு வந்து கொடுத்துட்டு சாப்பிட்டு விட்டு இங்கேயே இரு என்றார் ; புரந்தர கேசவனுக்கு ரொம்ப சந்தோசம் இப்படியாக ஒரு வாரம் கழிந்தது , கடைசி நாள் மகாப்பெரியவர் வேற ஊருக்கு கிளம்பறார் ; புரந்தர கேசவன் கண்களில் கண்ணீர் மல்க ஒரு ஓரமாய் நின்றுக் கொண்டிருந்தான் ; மகாப்பெரியவர் அவனை அழைத்து நான் உனக்கு என்ன செய்யணும் என்றுக் கேட்டார் ; அதற்கு அவன் என்னோட கடைசிக் காலத்தன்னைக்கு நீங்கதான் எனக்கு எல்லாம் செய்யணும் என்றான் ;

மகாப்பெரியவர் அவன் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்து விட்டு புறப்பட்டார் பல ஆண்டுகள் இருண்டோடியது ; அன்றொரு நாள் காலையில் மகாப்பெரியவர் யாரிடமும் எதுவும் பேசவில்லை , அங்கிருந்த குளத்தில் நீராடிவிட்டு ஒரு கல் மேல் அமைந்துக் கொண்டு தியானம் செய்தார் ; மறுபடியும் குளத்திற்கு சென்று நீராடினார் , மீண்டும் கல் மீது அமர்ந்து தியானம் செய்தார் ; இதுப் போல் ஏழு முறை செய்தார் அங்கிருந்தவர் களுக்கு ஒன்றும் புரியவில்லை ;

அப்போது மடத்து அதிகாரி கையில் ஒரு தந்தியுடன் அங்கு வந்தார் . மகாப்பெரியவர் அவரிடம் என்ன புரந்தர கேசவன் தவறிப் போயிட்டானா ? அதனாலதான் நான் அவனுக்கு கர்மா பண்ணிண்டு இருந்தேன் ; அப்போது அங்கிருந்தவர்கள் அவரிடம் நீங்கள் ஏன் ஏழு முறை நீராடி னீர்கள் என்று கேட்டனர் ; அதற்கு மகாப்பெரியவர் இன்னுமவனுக்கு பலப் பிறவிகள் உண்டு அதனாலே அவனோட ஒவ்வொரு பிறவியையும் நான் கர்மா செய்து அவனை நேரா சொர்கலோகம் அனுப்பி வைத்தேன் என்றார்
Periyava said no to report for a political party,Brahmins like aragampul,Periyava eyesight,
If any shortcomings in this script pl.mail it to rvjcdl@gmail.com or send message through facebook. Do not comment anything contradictory in the comments column about this matter.Pl.send your contradictory comments in my message column. 

I am aged, Come for darsan here- Periayva.
Periayava was camping at Kalavai. Sundaramurthy,devotee of Periyava that devotees wanted for darsan of Periyava and so Periyava must come once again to Walaja. Periyava that I am aged and cannot walk for Walaja once again. So I am here. So the devotees can come and see me here. But Sundramurthy said that there were devotees who cannot make over here. Periayava listened to Sundaramurthy and so he went to Walaja again to bless the devotees. Such was the karunai of Periyava. 

Poltiical party, report-Periyava said no.-Brahmins-arugampul
Tamil Nadu went to polls. A devotee connected with the political party approached Periyava through some other devotees that Periyava must issued a press stament asking to vote for that political party. Another devotee was no happy over this issue and he said how a political party leader can approach Periayva for issuing a press statement.But Periyava said to the devotee who approached him to issue a press statement that the responsibilities of the Sri Matam are now with the Pudu Periyava. So I cannot issue any statement. Moreover, some days before Pudu Periyava issued a press statement that we are religious body, we cannot support any party. Pudu Periyava did not want to support or supported any political party. Periyava quoting thePudu Periyava statement that Pudu Periayava had already issued a statement. I cannot issue any statement that means the report of Pudu Periyava carries no meaning. Thus Periyava stood by the report of Pudu Periyava. So differences between Periyava and Pudu Periyava over this issue was sorted out in a gentle manner by Periyava. 
The devotee who approached Periayava said if no statement was issued from Sri Matam, they may give troubles to Brahmins. Periyava said that if I did not issue a statement, if they give troubles to Brahmin, let them face it and we cannot do anything for it. Periyava continued that Brahmins are like aragumpul. They cannot be destroyed. At times when troubles are on, they may seem to be dull but when they get good time, they will return to normal life. Araugampul may look dry during sunny days or there is no water, but it will grow where water is present and Brahmins are like aragumpul. Aragumpul cannot be destroyed easily. It will grow here and then after some it will grow in another place. So Brahmins will take care of themselves. 

Periyava eye sight
For us, many felt that Periyava’s eye sight had faded. Kaingariya devotees used to say to Periyava that there were steps , steps like that. For kaingariya devotees, Periyava had less vision and they thought their timely help was required. When devotees came for darsan, Periyava asked the kaingariya devotee to call the devotee( who was performing puja in a pillaiayar temple at Sembakkam,Vellore-Pillaiayar shetram) wearing nosering. It was unusual for gents to wear nosering. Many searched for that nosering devotee but he was standing behind Periyava. Sundaramurthy told others that we are thinking that Periyava ‘s vision was not good and we were helping him . But we had not noticed that a devotee was wearing nosering but Periayava was able to note it when there a large number of devotees. Thus Periyava’s eyesight during 1984 was good. 

Periyava camped at Sholingar- Karvet nagar-Perun Kanchi. Sundaramurthy , Ramayana Srinivasan and other devotees were with Periyava. Ramayana Srinivasan is now with Bala Periyava and he is doing kaingarium now to Pudu Periyava. Sundaramurthy used to attend his classes – office -during day time and during evening hours, he was with Periayava. When Periayva was in Perun Kanchi, some old ladies came for darsan of Periayva.
Periyava said not to open mouth,removing agnanam from us.Need for going to Periyava sannidhis-Ramanar explanation.-Complex issues solved by Periyava in a simple manner.-dhoties for deities.

If any shortcomings in this script pl.mail it to rvjcdl@gmail.com or send message through facebook. Do not comment anything contradictory in the comments column about this matter.Pl.send your contradictory comments in my message column. 
At that time some old ladies (pattigal) came for darsan of Periayva . One old lady told Periyava that my son used to say that I will beat you if I speak something.. Devotees who were were expecting a reply from Periyava that patti’s son must not say like that. But Periyava asked that old lady not to speak anything. If we observe mounam,(silence) and chant Periyava smaranai or bhagawan smarani, it would be better for us.Periyava aked that old lady to observe silence so that her son won’t get pavam . Thus Periyava explained a comlex thing in a simple manner.The old lady was asked to observe silence so that her son cannot get accumulated sins by beating her mother for opening her mouth. The old ladies were sent to the respective places.

Ramanar and gnanam
Similarly a lady went and complained to Ramanar that his daughter-in-law was not treating her. But Ramanar told her that atma is same and what is use of complaining? Ramanar narrated an incident when a man was day dreaming about a theft in a house, like a thief breaking almirah, going with jewels- in dream, he shouted thief,thief like that- another man who was sleeping got up and he very well knew that he was shouting in dream- asked him to be silent. The man who shouted as thief got up and he opened his eyes and found nothing. Similar the fight beween daughter-in-law and the mother-in-law.
Likewise, we are seeing many thing like mother-in-law,daughter-in-law.If we get gnanam, we won’t have problems. That is the need for us visit bagawan sannidhis to get gnanam.

Dhoties to temples by Periyava.
Periyava then visited R.K. pettai and other places. Sundaramurthy was asked to buy dhoties when he went to Walajah. Sundaramurthy got the dhoties and Periyava asked Sundaramurthy to keep the dhoties with him. Periyava visited 5 temples and gave the dhoties to the deities.

Wednesday, August 28, 2013

இந்து மதம், எத்தனையோ யுகங்களாக இருந்து வருகிறது. 

ஏதோ ஆதாரம் இருப்பதால் தான் இந்து மதம் இவ்வளவு காலம் பிழைத்திருக்கிறது. எந்த மதமும், இவ்வளவு தீர்க்காயுளோடு இருந்ததாகத் தெரியவில்லை. 

நம் மதத்தை, நம்முடைய கோவிலைப் போல நான் நினைத்திருக்கிறேன். நம்முடைய கோவில்கள், மற்றவர்களுடைய கோவில்களைப் போல சுத்தமாக இல்லை. 

மற்ற மதத்தினர், தங்களுடைய கோவிலை, அடிக்கடி வெள்ளையடித்து, சுத்தமாக வைத்திருக்கின்றனர். நம்முடைய கோவில்களின் மீது முளைத்திருக்கும் செடி, கொடிகளுக்கும், மரங்களுக்கும் கணக்கே கிடையாது. 

அவ்வளவையும் தாங்கிக் கொண்டு, நம் கோவில்கள் நிற்கின்றன. மற்ற சமயக் கோவில்கள், இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தரமாவது பழுது பார்க்காவிட்டால், அதற்கு மேல் தாங்குவதில்லை. 

நம் கோவில்கள் கருங்கல்லால் ஆனவை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், நம் பெரியோர்கள், பலமாக அஸ்திவாரம் போட்டிருக்கின்றனர். ஆகையால் தான், அவை நீடித்து நிற்கின்றன. 

நாம், எவ்வளவோ பாதிப்புகள் செய்து வருகிறோம்; ஆபாசங்கள், அபசாரங்கள் செய்கிறோம்; இவ்வளவுக்கும் ஈடு கொடுத்து, அவை நிற்கின்றன. 

உலகில், மிகப் புராதனமான கோவில்கள், இந்தியாவில் இருப்பவை தான், என்று சொல்கின்றனர்; அவற்றை, படம் பிடிப்பதற்காக வருகின்றனர்; ஒவ்வொரு கணமும், அழிவதற்குரிய பல காரணங்கள் இருந்தும், அவை அழியாமல் நிற்கின்றன. 

அவற்றை, இடித்து விடுவதும் அவ்வளவு எளிதில்லை. கட்டுவதற்கு எவ்வளவு பாடுபட்டனரோ, அவ்வளவு பாடுபட வேண்டும்.

நம்முடைய மதமும் இப்படித்தான் இருக்கிறது. நமக்குத் தெரியாமல், ஏதோ ஒன்று, இதைத் தாங்கிக் கொண்டு நிற்கிறது.
Jaya Jaya Shankara, Hara Hara Shankara !


Read more: http://periva.proboards.com/thread/4895/#ixzz2dK3tHHvY
ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த கிருஷ்ண பக்க்ஷம் பித்ருக்களுக்கு இரவாகிறது. அஷ்டமி பக்க்ஷத்தின் நடுவில் வருவதால் அன்று பித்ருக்களுக்கு நடுநிசியாகும். ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்தது அஷ்டமியன்று நடுநிசி. இதனால் என்ன ஏற்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள் எல்லோருக்கும் GC. எல்லா தினுசிலும் இருட்டு அதிகமாக இருக்கும் சமயம். ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்ததும் இருள் நிறைந்த சிறைச்சாலை. இப்படி ஸ்ரீ கிருஷ்ணாவதார காலத்தில் எல்லாம் இருள் மயமான சூழ்நிலை.
அவனுடைய பெயரும் கிருஷ்ணன். 'கிருஷ்ண' என்றால் கருப்பு என்று பொருள். அவனது மேனியும் கறுப்பு. இப்படி ஒரே கறுப்பான சமயத்தில் தானும் கறுப்பாக ஆவிர்ப்பவித்தாலும் அவனே ஞான ஒளி. நல்ல காளமேகங்களாகளிடையே மின்னல் மாதிரி இத்தனை இருட்டுக்கு நடுவே தோன்றிய ஞான ஒளி.
http://www.kamakoti.org/tamil/part1kurall25.htm?
https://www.facebook.com/photo.php?v=371504229618024

Sunday, August 25, 2013


"புரந்தர கேசவன்"

காஞ்சி மகாப் பெரியவர் அப்போது ஆந்திர மாநிலத்தில் விஜயம் செய்து கொண்டிருந்தார்; ஒரு நாள் ஒரு சிறிய கிராமத்தை தாண்டி மகாப்பெரியவர் போக வேண்டி இருந்தது ; வழியில் இருந்த அந்த கிராம மக்கள் எப்படி யாச்சும் மகாப்பெரியவரை நம்ம கிராமத்திற்குள் அழைத்து
செல்லன்னும்ன்னு ஆசை அதனாலே மகாப்பெரியவர் செல்லும் வழியில் கிராம மக்கள் வரிசையாக நின்றுக்கொண்டு மகாப்பெரியவர் வந்தவுடன் கீழே விழுந்து வணங்கி... மகாபெரியவா எங்க கிராமத்திற்கு ஒரு முறை வந்து செல்லனும் ன்னு வேண்டி கேட்டுக்கொண்டார்கள் ;

பெரியவரும் சிரித்துக்கொண்டே சரி சரி ஒரு நாள் என்ன ஒரு வாரமே தங்கிட்டு போறேனே என்றார் ; கிராம மக்களுக்கு சொல்லொன்னா மகிழ்ச்சி உடடியாக கிராமம் மொத்தமும் சுத்தமா கூட்டி பெருக்கி கோலம் போட்டு மகாப்பெரியவர் ஒரு வாரம் தங்கு வதற்கான ஏற்பாடுகள் செய்து விட்டார்கள் ; மறு நாள் காலை மகாப்பெரியவர் சந்திர மவுலிசர் பூஜை செய்ய வில்வ தளம் வேணுமே இருக்கா கேளுங்கோன்னு சொன்னார் மடத்துகாரர்கள் கிராமத்து தலைவரிடம் கேட்டார்கள் கிராமத்து மக்களுக்கு வில்வதளம் எப்படி இருக்கும்ன்னு தெரியவில்லை ; மடத்திலிருந்து பழைய வில்வதலத்தைக் காட்டி எடுத்து வரச்சொன்னார்கள் ,

சிறுது நேரம் கழித்து வந்தவர்கள் கிராமத்தில் எங்குமே வில்வ மரமே இல்லை என்றார்கள் மடத்தை சேர்ந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை மகாப்பெரியவரிடம் சென்று கையை பிசைந்துக்கொண்டு நின்றார்கள் மகாப்பெரியவர் என்ன வில்வதளம் கிடைக்கவில்லையா? சரி சரி கவலை விடுங்கோ ! அது தானே வரும் என்று சொல்லிவிட்டார் மறு நாள் விடியற் காலை பூஜைக்கு நேரமாச்சு வில்வதளம் இல்லையே என்ன பண்ணறது என்று யோசித்துக் கொண்டு இருந்த போது மடத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் கைகளில் கூடை நிறைய வில்வதளம் கொண்டு வந்தான் ;

எல்லோரும் அவனிடம் கேட்டார்கள் எப்படி வில்வதளம் கிடைத்தது அதற்கு அவன் வாசல் பக்கம் போனேன் , வாசலுக்கு முன்னாடி இது இருந்தது அப்படியே எடுத்துண்டு வந்துட்டேன் என்றான் ; மகாப்பெரியவர் சிரித்துக் கொண்டே என்ன வில்வதளம் வந்துடுத்தா என்றார் மடத்துக்காரர்கள் ஆமா கிடைச்சுடுத்து என்றார்கள் எப்படி கிடைச்சது என்று கேட்டதற்கு நடந்த விவரத்தை சொன்னார்கள் ; அப்படியா ரொம்ப சந்தோசம் நாளைக்கும் கிடைக்குதா பாருங்கோ சொல்லிவிட்டு பூஜை க்கு போய்விட்டார் ; அடுத்த நாள் காலை அதே சிறுவனை அனுப்பி வில்வதளம் கிடைகிறதா பார்த்து எடுத்து வரசொன்னார்கள் சிறுவனும் போனவுடனே அதே மாதிரி கூடை நிறைய வில்வதலத்தை எடுத்து வந்தான் ; மகாப்பெரியவர் கேட்டார் வில்வ இலையை யார் கொண்டு வரா தெரியுமான்னு ? எல்லோரும் திருதிருவென முழித்தார்கள் பதில் எதுவும் சொல்லவில்லை மகாப்பெரியவர் சொன்னார் விடியற் காலையில் ஒளிந்திருந்து பார்த்து வில்வைலையை எடுத்துக் கொண்டு வருபவனை அப்படியே அழைத்து வாருங்கள் என்றார்

மடத்துக் காரர்களும் மறு நாள் காலை பார்த்துக்கொண்டே இருந்தார்கள் ; அப்போது தூரத்தில் ஒரு உருவம் மெல்ல மெல்ல தயங்கியப்படியே வந்து கையில் இருந்த கூடையை வைத்து விட்டு ஒடப்பார்க்கும் போது மடத்துக்காரர்கள் அந்த உருவத்தை பிடித்து கொண்டு அப்படியே மகாப்பெரியவரிடம் முன்னால் நிறுத்தினார்கள் அவ்வுருவம் மிகச்சிறியவ னாய் இருந்தான் அழுக்குத்துண்டுடன் சிறிது நடுங்கியபடி நின்றிருந்தான் ; மக்கப்பெரியவர் அவனை அருகில் அழைத்து உன் பெயர் என்ன என்றுக் கேட்டார் அவனும் மென்று முழுங்கியபடியே புரந்தரகேசவன் என்று சொன்னான் ;
அப்படியா யார் இந்த பெயரை வைத்தார்கள் கேட்டதற்கு அவன் சொன்னான் எங்க அப்பா தான் வைச்சார் அவருக்கு புரந்தரரை ரொம்ப பிடிக்கும் அதனால் எனக்கும் புரந்தர கேசவன் அப்படின்னு பேர் வைச்சார் இப்ப அவர் இல்லை ; நான் காட்டில் மாடு மேய்த்து வருகிறேன் ; அப்பா இருக்கும் போது காட்டில் ஒரு மரத்தை காட்டி இதை நல்லா நினைவில் வைத்துக்கொள் ; ஒரு நாள் நம்ப கிராமத்திற்கு பெரியவர் ஒருவர் வருவார் , அப்போ இந்த மரத்து இலைகள் அவருக்கு தேவைப்படும் , அப்போ நீபோய் இந்த இலைகளை அவரிடம் சேர்த்து விடுன்னு சொன்னார் ; கிராமத்து மக்கள் தேடினது எனக்கு தெரிந்தது ; அதனால கொண்டுவந்து வைத்தேன் என்றான் ;

அப்படியா !அது சரி நீ ஏன் உள்ள வராம வாசலிலேயே வைச்சுட்டு ஓடிப் போயடரே? புரந்தரகேசவன் ; நான் குளிக்காம அழுக்குத்துணி யோட எப்படி வரது ?அதனாலதான் உடனே மகாப்பெரியவர் அவனை குளித்து புது வேட்டியை கொடுத்து கட்டிக்கொள்ள சொன்னார் ; பிறகு இனிமே நீ வில்வ தளத்தை எடுத்துண்டு வந்து கொடுத்துட்டு சாப்பிட்டு விட்டு இங்கேயே இரு என்றார் ; புரந்தர கேசவனுக்கு ரொம்ப சந்தோசம் இப்படியாக ஒரு வாரம் கழிந்தது , கடைசி நாள் மகாப்பெரியவர் வேற ஊருக்கு கிளம்பறார் ; புரந்தர கேசவன் கண்களில் கண்ணீர் மல்க ஒரு ஓரமாய் நின்றுக் கொண்டிருந்தான் ; மகாப்பெரியவர் அவனை அழைத்து நான் உனக்கு என்ன செய்யணும் என்றுக் கேட்டார் ; அதற்கு அவன் என்னோட கடைசிக் காலத்தன்னைக்கு நீங்கதான் எனக்கு எல்லாம் செய்யணும் என்றான் ;

மகாப்பெரியவர் அவன் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்து விட்டு புறப்பட்டார் பல ஆண்டுகள் இருண்டோடியது ; அன்றொரு நாள் காலையில் மகாப்பெரியவர் யாரிடமும் எதுவும் பேசவில்லை , அங்கிருந்த குளத்தில் நீராடிவிட்டு ஒரு கல் மேல் அமைந்துக் கொண்டு தியானம் செய்தார் ; மறுபடியும் குளத்திற்கு சென்று நீராடினார் , மீண்டும் கல் மீது அமர்ந்து தியானம் செய்தார் ; இதுப் போல் ஏழு முறை செய்தார் அங்கிருந்தவர் களுக்கு ஒன்றும் புரியவில்லை ;

அப்போது மடத்து அதிகாரி கையில் ஒரு தந்தியுடன் அங்கு வந்தார் . மகாப்பெரியவர் அவரிடம் என்ன புரந்தர கேசவன் தவறிப் போயிட்டானா ? அதனாலதான் நான் அவனுக்கு கர்மா பண்ணிண்டு இருந்தேன் ; அப்போது அங்கிருந்தவர்கள் அவரிடம் நீங்கள் ஏன் ஏழு முறை நீராடி னீர்கள் என்று கேட்டனர் ; அதற்கு மகாப்பெரியவர் இன்னுமவனுக்கு பலப் பிறவிகள் உண்டு அதனாலே அவனோட ஒவ்வொரு பிறவியையும் நான் கர்மா செய்து அவனை நேரா சொர்கலோகம் அனுப்பி வைத்தேன் என்றார்

Saturday, August 24, 2013

1907 ல் காஞ்சி காமகோடி பீடத்தின் 68 வது பீடாதிபதியாக தன் 13 ஆம் வயஸில் ஆரோஹணம் செய்து, தனது வாக் அம்ருதத்தாலும், சாஸ்திரங்கள் சொன்னதை இம்மியளவு கூட பிசகாமல், சிஷ்டாச்சாரத்தோடு தானே கடைப்பிடித்து காட்டியதாலும், நூறு வர்ஷங்கள் அல்பங்களான நம்மிடையே நடமாடி, இன்றும் ஆத்மார்த்தமாக நினைப்போர்க்கு அபயம் அளிக்கும் மஹா பெரியவா.........இந்தப் பட்டத்தை ஏற்றுக் கொண்ட அன்று மாலை, உபன்யாஸம் பண்ணச் சொல்லி மடத்தில் உள்ள பெரியவர்கள் வேண்டிக் கொண்டார்கள். 

கும்பகோணமே நிரம்பி வழிந்தது! பெரியவா பேச ஆரம்பிக்கும் முன் கூட்டத்திலிருந்த ஒரு வயஸானவர் இந்த பால ஸ்வாமிகளை வியப்போடு பார்த்தார். 
"66 வது ஆச்சார்யாள் ரொம்ப அழகா உபன்யாஸம் பண்ணுவார்..அவரோட வாக்வன்மை எல்லாரையும் ஆகர்ஷிக்கும். ஆனா, இவரோ...... ரொம்ப சின்னக் கொழந்தையா இருக்காரே! என்னத்தை பேசப் போறார்?" என்று மனஸில் சந்தேகம் அலைபாய கூட்டத்தில் முன்னால் வந்து உட்கார்ந்தார்.

அன்று பெரியவாளுடைய முதன்முதல் உபன்யாஸம் "ஸ்யமந்தகமணி" திருட்டுப் போனது, கிருஷ்ணனுக்கு அபவாதம் வந்தது, அப்புறம் ஜாம்பவானோட சண்டை போட்டு ஜாம்பவதியை கல்யாணம் பண்ணிக் கொண்டு, ஸ்யமந்தகமணியை கொண்டுவந்து அபவாதம் நீங்கப் பெற்றது பற்றி ரொம்ப அழகாக பேசினார். அன்று அத்தனைபேரும் ஆனந்தக் கடலில் மூழ்கினர். என்ன அருமையான, கோர்வையான உபன்யாஸம்!
அந்த வயஸானவர் ஓடி வந்து பெரியவா பாதத்தில் விழுந்தார்........"மஹாப்ரபோ!" என்று அரற்றினார். அப்புறம் கூட்டத்தினரை நோக்கி பேசினார்.

" 66 வது பீடாதிபதியான கலவை பெரியவாளோட உபன்யாசத்தை நான் நெறைய தடவை கேக்கற பாக்யத்தை அடைஞ்சிருக்கேன்.....இந்த பதிமூணு வயஸ் கொழந்தை என்ன பேசப் போறார்?...ன்னு நெனெச்சேன்.....ஆனா, இந்த மொதல் உபன்யாசத்லேயே....... 'தான், பழைய பீடாதிபதிக்கு ஏத்த வாரிசுதான் !' ன்னு நித்ரூபிச்சுட்டார்! என்னோட தப்புக்கு நான் மனஸார மன்னிப்புகேட்டுக்கறேன் ஆனா, என்னால இப்போ அழுகையை கட்டுப் படுத்த முடியலை.........ஏன்னா, எனக்கு இப்போவே எம்பதுக்கு மேல வயசாச்சு. இன்னும் இந்த ஆச்சார்யாளோட உபன்யாசங்களை எவ்வளவு நாள் கேக்கப் போறேன்?..ன்னு நெனைச்சா ரொம்ப தாபமா இருக்கு. அழுகையை அடக்க முடியலை " என்று அழுதார் அந்த பெரியவர்.
பெரியவாளோட முதல் உபன்யாசத்துக்கு அவருடைய பரமகுருவின் மஹா பக்தர் மூலம் கிடைத்த பாராட்டு!
பல வர்ஷங்களுக்கு முன்னால், ஒருமுறை நல்ல பனிக்காலம். பெரியவாளின் உதடுகள் ஒரே வெடிப்பாக வெடித்திருந்தது. பேசக்கூட முடியாமல் வேதனை இருந்தாலும் எதுவுமே காட்டிக்கொள்ளாமல் எப்போதும் போல வருபவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அம்மாதிரி உதடு வெடிக்கும்போது, அடிக்கடி வெண்ணை தடவிக் கொண்டே இருந்தால்,வெடிப்பு சரியாகிவிடும். ஆனால், பெரியவா கடைகளில் விற்கும் வெண்ணையை தடவிக் கொள்ள மாட்டார். என்ன பண்ணுவது?

ஒரு பாட்டி ரொம்ப அக்கறையோடு ஐந்து சேர் பசும்பால் வாங்கி, காய்ச்சி, உறைக்குத்தி தயிராக்கி அதை கடைந்து வெண்ணை எடுத்து, கொண்டுவந்து பெரியவாளிடம் குடுத்தாள்.

"பெரியவா.......ஒதடு ரொம்ப பாளம் பாளமா வெடிச்சிருக்கு. ரொம்ப மடியா வெண்ணைகடைஞ்சு எடுத்துண்டு வந்திருக்கேன்...பெரியவா ஒதட்டுல தடவிக்கணும்"..என்று வினயத்தோடு ப்ரார்த்தனை பண்ணிக்கொண்டாள்.

பெரியவாளுக்கு வெண்ணையை கண்டதுமே தான் த்வாபர யுகத்தில் அடித்த கூத்து ஞாபகம் வந்துவிடுமாதலால், ரொம்ப சந்தோஷப்பட்டார். பெரியவா மட்டும் சந்தோஷப்படவில்லை.......இன்னொரு ஜோடிக் கண்களும் அந்த வெண்ணையை காதலோடு பார்த்தன!

அப்போது தர்சனத்துக்கு வந்திருந்த ஒரு சின்னக் குழந்தை ஓடிவந்து பெரியவாளிடம் வெண்ணைக்காக குஞ்சுக்கையை நீட்டியது! சாக்ஷாத் பால கோபாலனே கேட்டது போல் அங்கிருந்தவர்களுக்கு தோன்றியது. கேட்காமலேயே மோக்ஷபர்யந்தம் [தன்னையே] குடுத்துவிடும் அந்த மஹா மஹா மாதா அப்படியே அத்தனை வெண்ணையையும் தூக்கி அந்த குழந்தையிடம் குடுத்துவிட்டார்!

இதைப் பார்த்துக்கொண்டிருந்த பாரிஷதர்களுக்கு கொஞ்சம் முகம் சுருங்கியது! "ரொம்ப சரி...கொழந்தை கேட்டா, ஏதோ ஒரு எலுமிச்சங்காய் சைஸில் உருட்டிக் குடுத்தா போறாதா என்ன? அப்டியே டப்பாவோடயா தூக்கி குடுக்கணும்?.. இப்போ ஒதட்டுல தடவிக்க ஏது வெண்ணை?.."

அவர்கள் உள்ளத்துக்குள் ஓடிய எண்ணங்களுக்கு பதில் வந்தது........

"ஏண்டா, முகம் தொங்கிப் போச்சு? கொழந்தை சாப்ட்டாலே என்னோட ஓதட்டு புண் செரியாப் போய்டும்..." சிரித்தார்.

அன்று சாயங்காலமே, பெரியவாளுடைய உதட்டில் எல்லா பாளம் பாளமான வெடிப்பும் சுத்தமாக போய்விட்டிருந்தது! வெண்ணை கேட்ட பாலகோபாலன் அதை சாப்பிட்டுவிட்டான் போலிருக்கிறது!

சரீரம் எதுவானால் என்ன? உள்ளிருக்கும் ஆத்மா ஒன்றுதானே?
ஸ்ரீ ஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம்
==============================================

விழுப்புரம் அருகில் உள்ளது வடவாம்பலம் கிராமம். 1926-ம ஆண்டு மகா பெரியவர் அந்த வழியாக போகும்போது மனதில் ஏற்பட்ட திடீர் சலனத்தின் காரணமாக அந்த கிராமத்துக்குள் தன் பரிவாரங்களுடன் நுழைந்தார்.”இங்கே ஒரு சந்நியாசி இருந்தாரே, ஞாபகம் இருக்கிறதா? என்று எதிர்பட்ட கிராமத்து முதியோர்களிடம் கேட்டார், யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அந்த கும்பலில் இருந்த ஒரு முதியவர் மட்டும் அந்த ஊரில் பல வருடங்களுக்கு முன் ஒரு துறவி இருந்ததாகவும், அவர் அதே ஓரில் சமாதி அடைந்ததாகவும் சொன்னார். இரண்டு, மூன்று வருடங்கள் அவரது சமாதிக்கு பூஜைகள் தொடர்ந்து நடந்ததாகவும், பிறகு அது நின்று போனதாகவும் சொன்னார்.
ஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்னும் 58-வது பீடாதிபதி அங்கேதான் சமாதி அடைந்திருக்கிறார் என்பதை தெரிந்துகொண்ட மகான் அந்த கிராமம் முழுக்கத் தேடி அவரது சமாதியை கண்டுபிடித்தார். பிறகு தன்னுடன் வந்த அடியார்களில் ஒருவரிடம் அந்த இடத்தை தோண்ட சொன்னார்.’அகலமாக வேண்டாம், ஆழமாக தோண்டுங்கள்’ என்று கட்டளையிட்டார். மண்வெட்டிஎடுத்து மகான் காட்டிய இடத்தை தோண்டினார் ஒருவர். அப்போது அருகில் இருந்த குமாரமங்கலம் சாம்பமூர்த்தி சாஸ்திரி என்பவர் மெய்மறந்து ‘தோண்டாதே தோண்டாதே’ என்று கூச்சலிட்டு அங்கேயே மயங்கி விழந்தார். தோண்டிய ஆசாமி திகைத்துபோய் உடனே தோண்டுவதை நிறுத்தினார். வெகு நேரத்துக்கு பிறகுதான் அவரது மயக்கம் தெளிந்தது. மகான் சாம்பமூர்த்தி சாஸ்திரியிடம் மெதுவாக விசாரித்தார். 

‘உடலில் காவி .. கையில் தண்டம். கழுத்தில் ருத்திராட்ச மாலை .. நெற்றி நிறைய விபூதி .. இத்துடன் ஆகாயத்தை தொடுமளவு ஒரு துறவியின் உருவம் என் கண் முன் தோன்றியது. அவருக்கு முன்னால், ஆயிரக்கணக்கான அந்தணர்கள் வேதபாராயணம் செய்வதைக் கண்டேன். ஒரு கட்டத்தில் அவர் மெல்லிய குரலில் ‘தோண்டாதே .. தோண்டாதே’ என்று கூறியது என் செவிகளில் விழுந்தது. அதையே நானும் சொல்லியிருப்பேன் போலிருக்கிறது. பின்னர் அந்த நெடிய உருவம் சிறிதாகி மறைந்து போனது! ‘சதாசிவம். சதாசிவம்’ என்று யாரோ ஜெபித்துக் கொண்டிருப்பதைக் கேட்டேன்!’ என்றார்.

அதே இடத்தில்தான் ஸ்ரீஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் இருப்பதை உறுதிசெய்துகொண்ட மகாபெரியவா, 1927-ஆம் வருடம் ஜனவரி மாதம் 17-ஆம் தேதி அதிஷ்டானத்துக்கு பிருந்தாவனம் கட்டி, சிவலிங்க பிரதிஷ்டை செய்தார். இப்போது அங்கே வருடா வருடம் ஆராதனை நடக்கிறது.

சேலத்தில் இருக்கிறது மகா பெரியவா கிரஹம் (இல்லம்). இந்த கிரஹத்தின் மாடியில் வசித்து வருகிறார் ராஜகோபால் என்பவர். கும்பகோணம் அருகில் இருக்கும் கோவிந்தபுரத்தையும் மகாபெரியவாளையும் சம்பந்தப்படுத்தி சுவாரஸ்யமான அனுபவம் ஒன்றைச் சொன்னார். 

ஒரு முறை தம்பதிசமேதராக காஞ்சி மகானின் தரிசனத்துக்கு சென்றிருந்தார் ராஜகோபால். அப்போது யதேச்சையாக பெரியவா ராஜகோபாலிடம் கேட்டாராம்: “ஏண்டா, நீ கோவிந்தபுரம் (காஞ்சி மடத்தின் 59-வது பீடாதிபதி ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இங்குதான் ஸித்தியடைந்தார்!) போயிருக்கியோ?”

‘இன்னும் போகலை’ என்றார் ராஜகோபால்.

புன்சிரிப்பு தவழ மகான் சொன்னார் : “ஒரு தடவை அந்த ஊருக்குப் போயிட்டு வா… புரியும்!’ ‘அந்த ஊர் எங்கே இருக்கிறது?’ என்றெல்லாம் கேட்காமல் நிறுத்திக் கொண்டார் அந்த பக்தர்.

இது நடந்த சில வருடங்களுக்குப் பிறகுதான் சேலத்தில் ‘பெரியவா கிரஹம்‘ ஸ்தாபிதமானது. காஞ்சி சங்கரமடத்தில் வருடாவருடம் மகா பெரியவா ஜெயந்தி (வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரம்) விமரிசையாக நடக்கும். அதேபோல் சேலம் பெரியவா கிரஹத்திலும் அதே தினம் பெரியவா ஜெயந்தி விழா நடக்கும். அன்றைய தினத்தில் சுமங்கலிகளுக்குப் புடவை தானம் அளிப்பது வழக்கம். இந்த புடவைகள் தஞ்சை மாவட்டம் குத்தாலத்தில் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தாரால் தயார் செய்யப்படுபவை. அந்த வருடம் , ராஜகோபாலின் மனைவி வழி உறவினரான ஒரு டாக்டர் (அமெரிக்காவில் இருக்கிறார்). சேலைகளை வாங்கிக் கொடுக்கும் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக சொல்லி இருந்தார். எனவே ராஜகோபால் தன் மனைவியுடன் குத்தாலம் சென்று புடவைகளை ஆர்டர் கொடுத்த பின், மெயின் ரோடு வந்தார். சேலம் திரும்புவதற்கு எந்த பக்கம் பயணம் செய்வது என்கிற குழப்பத்துடன் கணவனும் மனைவியும் பிற்பகல் நேரத்தில் பஸ் ஸ்டாப்பில் விழித்தனர். வயிற்றுப் பசி வேறு ஒரு பக்கம் அவர்களை அழுத்தியது. அப்போது ஒரு கார் வேகமாக வந்து அவர்கள் முன் பிரேக் போட்டு நின்றது.
டிரைவர் அவர்களிடம் கேட்கிறார்: “ஏன் சார் நீங்க கோவிந்தபுரம் போகணுமா?”

‘சட்‘ டென்று உறைத்தது ராஜகோபாலுக்கு. என்றோ ஒரு நாள் மகாபெரியவா இவரிடம் கேட்ட கேள்வியல்லவா இது? டிரைவரை மேலும் கீழும் பார்த்துவிட்டு “ஆமாம்” என்றார். ஒருவித பிரமிப்புடன்.

“வண்டியில் ஏறுங்கள். கொண்டுபோய் விடுகிறேன்” என்றார் டிரைவர்.

இருவரும் வண்டியில் ஏறினர். சிறிது நேரப் பயணத்துக்குப் பிறகு கார் கோவிந்தபுரம் சாலையில் போய் நின்றது. “இங்கேருந்து கொஞ்ச தூரம் நடந்தா கோயில் வரும்! தரிசனம் பண்ணிட்டுக் கிளம்புங்க” என்று சொன்ன அந்த டிரைவர் ராஜகோபால் கொடுத்த வாடகைப் பணத்தையும் வாங்கிக் கொள்ளாமல் புறப்பட்டுப் போய்விட்டார்.

கோவிந்தபுரத்தை அடைந்த தம்பதி கோயிலுக்குள் நுழையும் முன்னரே ஓர் அந்தணர் அவர்களைப் பார்த்து, “வாருங்கள் … வாருங்கள். உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். முதலில் சாப்பாடு. பிறகுதான் எல்லாம்!” என்று இருவரையும் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அவர் அழைத்துச் சென்ற இடம் போஜன சாலை! இரண்டே இலைகளைத் தவிர எஞ்சியிருந்த இலைகள் முன்னால் அடியவர்கள் சாப்பிடுவதற்காக அமர்ந்திருந்தனர்.

சாப்பிட்டு முடிந்த பின் கோயிலையும் அதிஷ்டானத்தையும் பார்த்துவிட்டுத்தான் தம்பதி சேலம் திரும்பினர்.

கார் சவாரி, சாப்பாடு, உபசரிப்பு எல்லாமே பெரியவா ஏற்பாடுதானோ? தன் பக்தர்களுக்கு எந்த குறையையும் அந்த மகான் வைத்ததே இல்லை!!
” இன்று குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுக்க வேண்டாம் ” !!! ஏன் ?

ஸந்நிதிக்கு வரும் குழந்தைகளுக்கு வாழைப்பழமோ கற்கண்டோ ஸ்ரீபெரியவாள் தவறாமல் வழங்குவார். தாமே நேராகக் கொடுப்பதுண்டு; அணுக்கத் தொண்டர்களைக் கொண்டு கொடுப்பதுமுண்டு.

விடுமுறை நாள்களில் பள்ளி ஆசிரியர்கள் பஸ் அமர்த்திக்கொண்டு பசங்களுடன் வருவது வழக்கம். அதனால் அந்நாள்களில் பணியாளர்கள் முன்னதாகவே வாழைப்பழமும் கற்கண்டும் நிறைய எடுத்து வைத்து விடுவார்கள்.

ஒரு விடுமுறை தினத்தன்று பெரியவாள் “இன்னிக்குக் கொழந்தைகளுக்கு வாழைப்பழம், கல்கண்டு குடுக்க வேண்டாம்” என்றார். ஏன் அப்படிச் சொன்னாரென்று புரியவில்லை.

தப தப என்று ஒரு பஸ்-லோட் பள்ளிச் சிறுவர்கள் ஆசிரியர்களுடன் வந்து விட்டனர். தம்மைக் காண வந்த சிட்டுக்களுக்கு ஒன்றும் தராமலா இந்த மா மதுர மஹா தாத்தா திருப்பி அனுப்பி வைப்பார் என்று பணியாளர் எண்ணினார்.

சரியாக அதே சமயம் திருமாளம் பஞ்சாபகேச ஐயர் என்ற பக்தர் ஒரு மூட்டை ஸஹிதம் வந்தார். மூட்டையைப் பெரியவாளுக்கு ஸமர்ப்பித்து, “பெரிவா ப்ரயோஜனப் படுத்திக்கணும்” என்று விண்ணப்பித்துக் கொண்டார்.

மூட்டையிலிருந்து குண்டு மல்லிகைகள் போன்ற நெற்பொரி. பெரியவாள் திருவமுது செய்து வந்தது அதைத்தான். இதை நினைத்தே அவர் ‘ப்ரயோஜனப் படுத்தி’க் கொள்ளச் சொன்னது. ஆனால் பெரியவாளோ தம்முடைய பிக்ஷைக் காலம் வரை தள்ளிப்போடாமல் அப்போதே அதைப் பிரயோஜனப்படுத்திக் கொண்டு விட்டார்.

பணியாளரைப் பார்த்து, “தேவாளுக்குப் பொரி ரொம்ப இஷ்டம். தெரியுமோ? கல்யாணத்துலகூட லாஜ ஹோமம்னு பொரி ஹோமம் பண்றாளோன்னோ? இந்தக் கொழந்தைகள்ளாம் தேவாள்தான். இவாளுக்கு வெல்லச் சக்கரையும் கொஞ்சம் சேர்த்து பொரி நெறய்ய விநியோகம் பண்ணுங்கோ. ஒடம்புக்கும் ஹிதம். மனஸுக்கும் ஸத்வம். பொரி சாப்பிட்டா பாபம் போறதுன்னு சாஸ்த்ரம்” என்றார்.

அவ்வாறே சிறாருக்கு வெல்லச் சர்க்கரை சேர்த்த பொரி வழங்கப்பட்டது. ஆவலாக வாங்கிக் கொண்டனர்.

தலைமையாசிரியர் வியப்பில் ஏற்பட்ட மகிழ்ச்சியுடன் சொன்னார் : “பசங்களில் பல பேருக்கு மஞ்சட்காமாலையும், வயிற்றுப்போக்கும். வாழைப்பழம் கூடாதென்று டாக்டர் சொல்லியிருக்கிறார். ‘பெரியவர்களோ வாழைப்பழம் கொடுப்பதுதானே வழக்கம்? அப்படிக் கொடுத்தால் பிரஸாதத்தை என்ன செய்வது?’ என்று கவலைப்பட்டுக் கொண்டேதான் வந்தேன். பெரியவர்களுக்குத் தெரியாததா? அதுதான் நெற்பொரி கொடுத்து அநுக்கிரஹித்திருக்கிறார்”.

அந்த தீர்க்க திருஷ்டி இருக்கட்டும். அது எல்லா மஹான்களுக்குமே உண்டுதான். ஆனால் அந்தப் பள்ளிப் பாலர்களை தேவர்கள் என்றாரே! அந்த எளிமை அவரொருவருக்கே உரித்தானதல்லவா?

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!
நாற்பது வருஷத்துக்கு முன்னாடி காஞ்சிபுரத்தில் ஒரு அக்ரஹாரத்தின் வழியாய் காமாட்சியம்மன் கோயிலுக்குப் போய்க்கிட்டிருந்தேன். திடீரென பெரியவர் வர்றார்ன்னு குரல் கேட்டது. பரபரப்பாய் மக்கள் இங்கேயும், அங்கேயும் போய்க்கிட்டிருந்தாங்க. நானும் ஏதோ வயசான பெரியவர் வர்றார்ன்னு திரும்பிப் பார்த்தா, மஹா பெரியவா.
நான் சடார்ன்னு அந்த ஞானியின் காலைப் பிடிச்சிட்டேன். அப்புறம் அவர் அந்த இடத்தை விட்டுப் போயிட்டார். நான் ஒரு மணி நேரம் அந்த இடத்திலேயே நின்னேன். அக்ரஹாரத்து அய்யர்களெல்லாம், ‘நாங்க கூட-இவரைத் தொட்டது கிடையாது. நீ காலையே பிடிச்சுட்டியே’ன்னாங்க. நான் ரொம்பப் பயந்து போயி, கோயிலுக்குள் நுழைந்தேன்.
கோயிலுக்குள் மஹா பெரியவர் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் பண்ணிக்கிட்டிருந்தார். தூரத்தில் நின்ன என்னை ‘வா’ன்னு சைகையால கூப்பிட்டார்.
‘சாமி தெரியாமல் காலைப் பிடிச்சுட்டேன்’னேன்.
அதற்குப் பெரியவர் ‘ஏதோ பூர்வஜென்ம வாசம், என் காலைப் பிடிச்சுட்ட. பரவாயில்லை, என்ன பண்றே’ன்னு கேட்டார்.
‘சினிமாவுல இருக்கேன்’ என்றேன்.
‘அதனால என்ன? எங்க இருந்தாலும் ஒழுக்கமாக இரு’ என்று சொல்லி தமது கைகளை எனது கைகள் மீது வைத்து ஆசீர்வாதம் பண்ணினார்.
அன்றிலிருந்து இன்று வரை காமாட்சின்னு சொல்லும்போது, அந்த மஹா பெரியவர் என்னை ஆசீர்வதிக்கிறதா உணர்றேன்.“
~ குணச்சித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி
நன்றி: “கல்கி”