Wednesday, August 28, 2013

இந்து மதம், எத்தனையோ யுகங்களாக இருந்து வருகிறது. 

ஏதோ ஆதாரம் இருப்பதால் தான் இந்து மதம் இவ்வளவு காலம் பிழைத்திருக்கிறது. எந்த மதமும், இவ்வளவு தீர்க்காயுளோடு இருந்ததாகத் தெரியவில்லை. 

நம் மதத்தை, நம்முடைய கோவிலைப் போல நான் நினைத்திருக்கிறேன். நம்முடைய கோவில்கள், மற்றவர்களுடைய கோவில்களைப் போல சுத்தமாக இல்லை. 

மற்ற மதத்தினர், தங்களுடைய கோவிலை, அடிக்கடி வெள்ளையடித்து, சுத்தமாக வைத்திருக்கின்றனர். நம்முடைய கோவில்களின் மீது முளைத்திருக்கும் செடி, கொடிகளுக்கும், மரங்களுக்கும் கணக்கே கிடையாது. 

அவ்வளவையும் தாங்கிக் கொண்டு, நம் கோவில்கள் நிற்கின்றன. மற்ற சமயக் கோவில்கள், இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தரமாவது பழுது பார்க்காவிட்டால், அதற்கு மேல் தாங்குவதில்லை. 

நம் கோவில்கள் கருங்கல்லால் ஆனவை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், நம் பெரியோர்கள், பலமாக அஸ்திவாரம் போட்டிருக்கின்றனர். ஆகையால் தான், அவை நீடித்து நிற்கின்றன. 

நாம், எவ்வளவோ பாதிப்புகள் செய்து வருகிறோம்; ஆபாசங்கள், அபசாரங்கள் செய்கிறோம்; இவ்வளவுக்கும் ஈடு கொடுத்து, அவை நிற்கின்றன. 

உலகில், மிகப் புராதனமான கோவில்கள், இந்தியாவில் இருப்பவை தான், என்று சொல்கின்றனர்; அவற்றை, படம் பிடிப்பதற்காக வருகின்றனர்; ஒவ்வொரு கணமும், அழிவதற்குரிய பல காரணங்கள் இருந்தும், அவை அழியாமல் நிற்கின்றன. 

அவற்றை, இடித்து விடுவதும் அவ்வளவு எளிதில்லை. கட்டுவதற்கு எவ்வளவு பாடுபட்டனரோ, அவ்வளவு பாடுபட வேண்டும்.

நம்முடைய மதமும் இப்படித்தான் இருக்கிறது. நமக்குத் தெரியாமல், ஏதோ ஒன்று, இதைத் தாங்கிக் கொண்டு நிற்கிறது.
Jaya Jaya Shankara, Hara Hara Shankara !


Read more: http://periva.proboards.com/thread/4895/#ixzz2dK3tHHvY

No comments:

Post a Comment