Friday, August 30, 2013

உலக விளையாட்டு

உறியடி உத்ஸவத்தில் வழுக்கு மரத்தில் பலர் ஏறி ஏறிச் சறுக்கி விழுவார்கள். கடைசியில் ஒரே ஒருவன் ஏறி விடுகிறான். அவன் ஒருவன் ஏறுவதற்காகத்தான் அத்தனை பேரையும் அத்தனை பிரயாசைப்படுத்தி விளையாட்டு நடக்கிறது.

உலக விளையாட்டும் அப்படியே! நம்மில் பலர் சறுக்கி விழுந்தாலும் ஒருவன் பூரணத்துவத்தைப் பிடித்துவிட்டால் போதும், எத்தனை முறை சறுக்கினாலும் உறியடியில் திரும்பத் திரும்ப முயற்சி செய்பவனைப் போல், நாமும் பூரணத்துவத்தை அடைய முயன்று கொண்டிருப்போம்.

அம்பாள் நம்மில் யாருக்குக் கை கொடுத்து ஏற்ற வேண்டுமோ, அவனை ஏற்றி வைப்பாள். அவன் ஒருத்தன் அதற்குப் பிற்பாடு இந்த ஏமாற்று வித்தையிலிருந்து தப்புவதே நம் இத்தனை பேருக்கும் போதும்.

- காஞ்சி மகா பெரியவர்

No comments:

Post a Comment